நாயைக் கொன்று சமைத்துச் சாப்பிட்ட அமெரிக்கர்
Subscribe to Oneindia Tamil
ஹூஸ்டன்: அமெரிக்காவில் 25 வயது இளைஞர் ஒருவர் நாயைக் கொன்று அதைச் சமைத்து சாப்பிட்டுள்ளார்.
புளோரிடாவைச் சேர்ந்தவர் தாமஸ் எலியாட் ஹக்கின்ஸ். இவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் செய்த குற்றம் நாயைக் கொன்று சமைத்தது.
கடந்த வியாழக்கிழமையன்று இவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் போலீஸாருக்குப் போன் செய்தார். அதில், தான் வளர்த்து வந்த நாயை கழுத்தை நெரித்துக் கொன்றார் தாமஸ். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி அடுப்பில் சட்டியை வைத்து சமைத்துள்ளார்.
இதுகுறித்து அறிந்ததும் குடும்பத்தினர் போலீஸாருக்குப் போனைப் போட்டு விட்டனர். போலீஸார் வந்து தாமஸைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
உடலைத்தான் சமைத்தாரே தவிர தலையை அப்படியே தூக்கி குப்பையில் போட்டு விட்டாராம் தாமஸ்.
அடடா.. 'தலைக்கறியின் மகிமை' குறித்துத் தெரியாமல் போய் விட்டதா தாமஸு....!












Click it and Unblock the Notifications