தாய்மொழியில்தான் தொடக்க கல்வியா? சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன பெஞ்ச் விசாரிக்கிறது!

வழக்கின் பின்னணி?
கர்நாடக மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தொடக்கக் கல்வியை குழந்தைகளுக்கு தாய் மொழி அல்லது பிராந்திய மொழியிலேயே கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கடந்த 1994ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும்
அப்போது கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு அதிக நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச்சில் விசாரிக்கப்பட உகந்ததாகும். ஏனெனில், இவ்வழக்கில் இப்போதைய தலைமுறையினரின் அடிப்படை உரிமைகள் மட்டுமின்றி அடுத்த தலைமுறையினரின் அடிப்படை உரிமைகளும் அடங்கியுள்ளது.
தொடக்கக் கல்வியைத் தாய் மொழியில் அளிப்பதைக் கட்டாயமாக்கும் கர்நாடக அரசின் உத்தரவில் தலையிட ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய ஓர் பெஞ்ச் மறுத்து விட்டது. இந்நிலையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய நாங்களும் இவ்வழக்கை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது. இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications