ஜார்க்கண்ட் முதல்வராக பொறுப்பேற்றார் ஹேமந்த் சோரன்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தமது ஆதரவை விலக்கிக் கொண்டதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜனாதிபதி ஆட்சி காலம் இம்மாதம் முடிவடைகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க ஆளுநர் சயீது அகமதுவிடம் உரிமை கோரினார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சயீது அகமது பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தலைவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications