உத்தர்கண்டில் மீண்டும் பெருமழை - பல இடங்களில் நிலச்சரிவு.. 6 பேர் பலி!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமோலி மாவட்டத்தில் 6 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்தோர், மாவட்ட ஆட்சியர் வி.சண்முகத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேடாலி மனேரி மார்க் பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இதிலிருந்து மாநில முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் நூலிழையில் உயிர் தப்பினார். சமீபத்திய இயற்கைச் சீற்றத்தால் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிடச் சென்றபோது இச்சம்பவம் ஏற்பட்டது.
மலைப் பகுதிகளில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனை மறுசீரமைக்க ரூ. 300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சாலைகள் அமைப்பதற்குத் தேவையான நிலங்கள் சுமார் 5 ஹெக்டேர் வரை துரிதமாக ஒதுக்கீடு செய்ய மத்திய சுற்றுசூழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அனுமதி அளித்தார்.
மழைக்கு 6 பேர் சாவு
உத்தர்கண்டில் இரண்டாவது முறையாகப் பெய்த பெருமழைக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாநிலத்தில் புதன்கிழமை பெய்த மழைக்கு 4 பேர் உயிரிழந்தனர். பிலிபித் பகுதியில் 3 பேரும், சீதாபூர் பகுதியில் ஒருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications