சோலார் பேனல் ஊழல்- மலையாள நடிகர்களையும் விசாரிக்க போலீஸ் முடிவு
கொச்சி: கேரள சோலார் பேனல் கருவிகள் வழங்கியதில் நடந்த முறைகேடுகளில் கைது செய்யப்பட்டுள்ள சரிதா நாயருக்கு முன்னணி மலையாள நடிகர் நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், நடிகர் நடிகைளிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2-வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிமன்ற விசாரணையின்போது சரிதாநாயர் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்கு மூலமும் அளித்தார்.
அதில் சோலார் பேனல் கம்பெனியை தொடர்ந்து நடந்த முடியாததால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும், சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக தான் பணம் பெற்றது உண்மைதான் என்றும் ஒப்புக் கொண்டார்.
மேலும் நிர்வாக பிரச்சினை காரணமாக கம்பெனியை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே சோலார் பேனல் கருவி பொருத்துவதாகக் கூறி பணம் பெற்றவர்களிடம் திட்டமிட்டப்படி அந்த கருவிகளை பொருத்தி கொடுக்க முடியவில்லை என்றும் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சரிதாநாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 12 வழக்குகளில் விசாரணை நடந்துள்ளது.
எனவே இந்த வழக்குகளில் விரைவில் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் உள்ளனர் என்று கூறி அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் ஆதாரமாக காட்டி ஸ்ரீதரன் நாயர் என்பவரைக் கவிழ்த்துள்ளார் சரிதா.
மேலும் தனது நிறுவனத்தின் புரமோஷனுக்காக முன்னணி மலையாள நடிகர் நடிகைகளை சரிதா பயன்படுத்தியுள்ளார். நிறுவனத்தின் தொடக்க விழாக்களுக்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை இந்த நடிகர் - நடிகைகளை வைத்து நடத்தியுள்ளார்.
முன்னணி நடிகர், நடிகைகள், டி.வி. நடிகர், நடிகைகளுடன் சரிதா நாயர் எடுத்துக் கொண்ட ஏராளமான புகைப்படங்களையும் சரிதா வீட்டிலிருந்து எடுத்துள்ளனர்.
இந்த நடிகர் நடிகைகளை வைத்து முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம் சரிதா நாயர் காரியம் சாதித்தாரா... இந்த மோசடியில் நடிகைகளின் பங்கு என்ன, எவ்வளவு பணம் கைமாறியது என்றெல்லாம் விசாரிக்கின்றனர் போலீசார்.
ஏற்கெனவே இந்த வழக்கில் பிரபல நடிகை ஷாலு மேனன் கைதாகியுள்ள நிலையில், இப்போது போலீசார் விசாரணை தீவிரமாக்கியுள்ளது கேரள திரைத்துறையினருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications