Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிரம்பின கர்நாடக அணைகள்- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… விரைவில் 100 அடியை எட்டும்!

Subscribe to Oneindia Tamil

Water level in Mettur dam near 80 feet
மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. தற்போது அணை நீர்மட்டம் 79.75 அடியை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு கொள்ளளவான 124 அடியை எட்டிவிட்டது. இதனால், அணைக்கு வரும் 46 ஆயிரம் கன அடி நீரும், அப்படியே காவிரியில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

அதேப்போல, கபினி அணை நிரம்பிவிட்டதால் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் 33 ஆயிரம் கன அடி தண்ணீரும், காவிரியில் உபரி நீராக திறந்துவிடப்பட்டுள்ளது.

இவ்விரண்டு அணைகளிலும் திறந்தவிடப்பட்டுள்ள 79 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் கரைபுரண்டு வெள்ளமாக ஓடி, நாளை மாலை மேட்டூர் அணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே உபரி நீர் அதிகளவில் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வந்து கொண்டு இருந்தது. அது இன்று 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3800 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அணைக்கு வெளியே தெரிந்த புராதண சின்னங்களான நந்தி சிலை கடந்த வாரம் மூழ்கியது. தற்போது இரட்டை கோபுரமும் மூழ்கிவிட்டது. கடல்போல காணப்படும் மேட்டூர் அணையைக் காண சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். கடந்த 35 நாட்களில் அணையின் நீர்மட்டம் 65 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விரைவில் 100 அடியை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகேனக்கல் அருவில் வெள்ளம்

காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆக்ரோசமாக அதிவேகமாக வந்து கொண்டு இருக்கிறது. தற்போது 79000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளநீரில் செடி, கொடிகள், சிறிய பாறைகள், கற்கள் இழுத்துவரப்படுகிறது. நீர்வீழ்ச்சிகளை மூழ்கடித்து கொண்டு தண்ணீர் கொட்டுகிறது.

மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் 2 அடி அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் யாரும் அருவிக்கு செல்லாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஒகேனக்கல் காவிரியில் பொதுமக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறப்பது எப்போது?

மேட்டூர் அணை நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+