''ஹமாரா தேஷ்மே... இன் அவர் கன்ட்ரி ...'' இந்தியிலிருந்து இங்கிலீஷுக்குத் தாவிய ராஜ்நாத் சிங்

அமெரிக்காவில் போய் ஆங்கிலத்தில் பேசாமல் வேறு எந்த பாஷையில் பேசுவது என்று கேட்கலாம்.. ஆனால் ராஜ்நாத் சிங் ஆங்கிலத்தில் பேசியதால்தான் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் ஆங்கிலத்தை சாடி கருத்து வெளியிட்டிருந்தார் ராஜ்நாத் சிங். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஆங்கிலத்தில் பேசியதால்தான் நமது கலாச்சாரம் கெட்டு்ப போய் அழிந்து விட்டது என்று அவர் கடுமையாக கூறியிருந்தார். மொழி அழிந்து விட்டது, குறிப்பாக சமஸ்கிருதம் இன்று கிட்டத்தட்ட இல்லாத நிலையை நோக்கிப் போய் விட்டது என்று காட்டமாக பேசியிருந்தார்.
ஆனால் அமெரிக்காவுக்குப் போன இடத்தில் அவரே ஆங்கிலத்தில் பேசியதை சகட்டு மேனிக்கு காங்கிரஸ் கட்சியும், மற்றவர்களும் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனர்.
அட..மோடியின் குஜராத்திலிருந்து பிறந்த அமுலே ராஜ்நாத்தின் ஆங்கிலப் பேச்சைக் கிண்டலடித்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அமுல் வழக்கம் போல வெளியிடும் நாளிதழ் கார்ட்டூன் விளம்பரத்தில் இன்று காலை வெளியான கிண்டல் வாசகம் இப்படி இருந்தது.. ஆங்கிலம் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி... இப்படி இருந்தது அந்தக் கிண்டல் வாசகம்.
அமெரிக்க பயணத்தின்போது நரேந்திர மோடிக்கான விசா தடை குறித்து விவாதிப்பேன் என்று ஏற்கனவே சிங் கூறியிருந்தார். அது குறித்து மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி கருத்து தெரிவிக்கையில், எப்படி இந்தியில் பேசுவாரா அல்லது ஆங்கிலத்தில் பேசுவாரா என்று கிண்டலடித்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications