தேர்தல் சர்வே.. மே.வங்கத்தில் கம்யூ.வுக்கு பின்னடைவு! திரிணாமுல், காங்.குக்கு ஏறுமுகம்!!

இந்த கருத்துக் கணிப்பானது நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிக்கு கூடுதல் இடங்களும் திமுக, தேமுதிகவுக்கு பின்னடைவும் ஏற்படும் என்று இதில் கூறப்பட்டிருந்தது. இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. 2009ஆம் ஆண்டு இடதுசாரிகள் 43% வாக்குகள் பெற்று 15 இடங்களைக் கைப்பற்றியிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் 31% வாக்குகளுடன் 19 இடங்களையும் 14% வாக்குகளுடன் 6 இடங்களை காங்கிரஸும் 6% வாக்குகளுடன் 1 தொகுதியையும் பாஜக கைப்பற்றியிருந்தது.
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் இடதுசாரிகளுக்கு மிகக் கடுமையான பின்னடைவும் இதர கட்சிகளுக்கு கூடுதல் இடங்களும் கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. அதாவது இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் 18%ஆகவும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 32% ஆகவும் காங்கிரஸுக்கு 22%, பாஜகவுக்கு 12% வாக்குகளும் கிடைக்குமாம். இடதுசாரிகளுக்கு 7 முதல் 11 தொகுதிகளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 23 முதல் 27 தொகுதிகளும் காங்கிரஸுக்கு 5 முதல் 9 தொகுதிகளும் பாஜகவுக்கு 2 தொகுதிகள் வரையும் கிடைக்குமாம்.
மேலும் மத்திய் அரசில் இருந்து மமதா வெளியேறியது சரி என 23% பேரும், கடந்த 30ஆண்டுகால இடதுச்சாரிகள் ஆட்சியைவிட திரிணாமுல் ஆட்சி சிறப்பாக இருப்பதாக 38% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளாதவர் மமதா என்று 43% பேர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications