வடமாநிலங்களில் கன மழை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உள்பட 2 ரயில்கள் தாமதம்
சென்னை: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட இரண்டு ரயில்கள் தாமதமாக வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் கன மழை பெய்து வருகிறது. மும்பையில் மக்கள் வெளியில் நடமாடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வர்தாவில் வெள்ளம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதில் வார்தா மாவட்டத்தில் ரயில்பாதைகள் முற்றிலும் மூழ்கியுள்ளன. நாக்பூர் - வார்தா இடையே ரயில்பாதைகள் தண்ணீரில் சூழப்பட்டுள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவது சிலமணிநேரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தாமதமாக வரும் ரயில்கள்
இதனால் வடமாநிலங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் பல மணிநேரம் தாமதமாக வந்துகொண்டிருக்கின்றன.

ஜிடி எக்ஸ்பிரஸ் 6 மணி நேரம் லேட்
டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு காலை 6.20 மணிக்கு வந்து சேரும் ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடும் தாமதமாக வருகிறது
சென்னைக்கு காலை 7.15 மணிக்கு வந்து சேர வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாக வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சங்கமித்ரா நான்கு நாட்களாக பாதிப்பு
பாட்னா - பெங்களூர் இடையே இயக்கப்படும் சங்கமித்ரா ரயில் கடந்த 4 நாட்களாக இயக்கப்படாமல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

மதுரை -டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலும் லேட்
அதேபோல், இரவு 11 மணிக்கு மதுரையில் இருந்து டேராடூன் செல்ல இருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10 மணிக்கு புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்களின் தாமதம் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications