ஓடும் ரயிலில் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: திருவனந்தபுரத்தில் ரயில்வே அதிகாரி கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நர்சிங் மாணவியை ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற ரயில்வே அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை 3.45 மணியளவில் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. ஒரு பெட்டியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் தனியாக பணம் செய்தார்.
அந்த ரயில் கோட்டயத்தை நெருங்கி கொண்டு இருந்தபோது, கொங்கன் ரயில்வேயில் அதிகாரியாக பணிபுரியும் ராஜன் என்பவர் அந்த பெட்டிக்கு வந்தார். தனியாக இருந்த மாணவியை சீண்டினார். பின்னர் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் அச்சமடைந்த அந்த மாணவி, கத்தி கூச்சல் போட்டார். அவரிடமிருந்து தப்பிக்க போராடினார். உடனடியாக தன்னிடமிருந்த செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த ரயில் கோட்டாயம் நிலையத்தை அடைந்த உடன் அங்கு தயாராக நின்ற போலீசார் ராஜனை கைது செய்தனர். அதன் பிறகு அவரை காசர்கோடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் ராஜனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மீது ஏற்கனவே இதுபோல 2 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications