புத்தகயா குண்டுவெடிப்பு வழக்கு: வெளிநாட்டவர் உள்பட 5 பேரின் வரைபடங்கள் வெளியீடு
பாட்னா: புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 குற்றவாளிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவிலில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 10 குண்டுகள் வெடித்தன. இதில் 2 புத்த பிக்குகள் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது. முன்னதாக 2 குற்றவாளிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக வெளிநாட்டவர் உள்பட 5 பேரின் வரைபடங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த வரைபடங்கள் ரிக்ஷாக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடம் அளிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications