சீனா: பீதியைக் கிளப்பும் ‘பறக்கும் தட்டுகள்’: ஆளில்லா ‘கேக் டெலிவரி’ விமானத்திற்குத் தடை
ஷாங்காய்: சீனாவில், ஆளில்லா விமானங்கள் மூலம் கேக் டெலிவரி செய்யும் விமானங்கள் சில சமயங்களில் அந்தரத்தில் கேக் பார்சலைத் தவற விட்டு, பொதுமக்களை அலற வைப்பதால் அவற்றிற்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று தனது ஆன்லைன் புக்கிங் வாடிக்கையாளர்களுக்கு, ஆளில்லா விமானங்கள் மூலம் பேக்கரி ஐட்டங்களைச் சப்ளை செய்து வருகிறது.

மூன்றரை அடி விமானம்...
மூன்றரை அடி அகலம் கொண்ட இந்த ரக விமானங்களில் 2 தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும்.

கில்லாடி விமானங்கள்...
முகவரியை டியூன் செய்து விட்டால் சரியாக விலாசம் தேடி டெலிவரி செய்வதில் இந்த விமானங்கள் கில்லாடிகளாம்.

தவறும் பார்சல்கள்...
ரிமோட் கண்ட்ரோல் முலம் இயங்கும் அத்தகைய விமானங்கள் சமயங்களில் அந்தரத்தில் பறக்கும் போது, பார்சலைத் தவற விட்டு விடுகின்றன. கடந்த வாரத்தில் கூட குவாங்பூ ஆற்றருகே ஒரு பார்சல் தவரி கீழே விழுந்தது.

சுற்றுலாப் பயணிகள் பீதி...
திடீரென கீழே விழுந்த கேக் துண்டங்களைக் கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயந்து ஓடினர். அதனைத் தொடர்ந்து வீண் வதந்திகளும் ,பீதியும் பப்பகுதியில் பரவியது.

தடா...
அதன் எதிரொலியாக, தற்காலிகமாக ஆளில்லா விமானத்தின் மூலம் பேக்கரி ஐயிட்டங்களை டெலிவரி செய்யும் திட்டத்திற்கு தடா விதித்துள்ளது சீன அரசு.

9 ட்ரான்கள்...
தற்போது, 3 சிறிய ரக ஆளில்லா விமானங்கள் மற்றும் மோட்டார் ரக 6 ஹெலிகாப்டர்களை அந்த தனியார் பேக்கரி நிறுவனம் சொந்தமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications