நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்... 5 மீனவர்கள் படுகாயம்
நாகை: நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேர் மீது இலங்கை மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடியடுத்த பெருமாள் பேட்டையைச் சேர்ந்த தேசிங்கு, ரங்கநாதன், சிங்காரம், மகாதேவன், விமல்ராஜ் ஆகிய 5 மீனவர்கள் நேற்று கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினர் உதவியோடு நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த 5 மீனவர்களும் இன்று கரை திரும்பியனர். தற்போது, அவர்கள் 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications