Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநிலம் கேட்போருக்கெல்லாம் அள்ளிக் கொடுத்தால்....50 புது மாநிலங்கள் உருவாகும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா முழுவதும் கோரப்பட்டு வரும் தனி மாநில கோரிக்கைளை மத்திய அரசு ஏற்பதாக இருந்தால் 50 புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டி வருமாம்.

அந்த அளவுக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் தனி மாநிலக் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளனவாம்.

கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து தனி மாநிலக் கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்து குவிந்துள்ளதாம்.

குவியும் கோரிக்கைகள்

உள்துறை அமைச்சகத்திடம் தனி மாநிலக் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் தினசரி குவிய ஆரம்பித்துள்ளதாம்.

India may have 50 states if all demands of new states conceded

20 மாநிலங்களிலிருந்து கோரிக்கைகள்

20 மாநிலங்களிலிருந்து தனி மாநிலம் தேவை என்ற கோரிக்கையுடன் ஏராளமான மனுக்கள் வந்துள்ளதாம்.

தமிழகத்திலிருந்து கொங்குநாடு

தமிழகத்திலிருந்து கொங்கு நாடு கோரிக்கை, மணிப்பூரைப் பிரித்து குகிலாந்து, வடக்கு வங்கத்தைப் பிரித்து காமத்பூர், கர்நாடகத்தைப் பிரித்து துளுநாடு ஆகிய கோரிக்கைகள் அவற்றில் சில.

எந்த அரசும் ஆதரவில்லை

ஆனால் உ.பியைத் தவிர மற்ற மாநில கோரிக்கைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவு இதற்கு இல்லையாம்.

உ.பியை நான்காக பிரியுங்கள்

உபியை நான்காக பிரித்து அவத் பிரதேஷ், பூர்வாஞ்சல், புந்தல்கந்த், பச்சிமன்சால் அல்லது ஹரித் பிரதேஷ் என புதிய மாநிலங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளது. இதற்கு உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் மேலும்

குவாலியரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநிலம், மத்தியப் பிரதேசத்தைப் பிரித்து ஒரு மாநிலம், ஆக்ராவை தலைநகராகக் கொண்டு ஒரு மாநிலம், அலிகாரைப் பிரித்து ஒரு மாநிலம் எனவும் கோரிக்கைகள் வந்துள்ளதாம்.

போஜ்பூர் மாநிலம்

போஜ்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநிலம் அமைக்கவும் கோரிக்கை வந்துள்ளதாம்.

விதர்பா

இதுதவிர விதர்பா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற பழைய கோரிக்கைக்கு ஆதரவாகவும் நிறைய மனுக்கள் வந்துள்ளனவாம்.

கூர்க்காலாந்து

மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங்கைப் பிரித்து கூர்க்காலாந்து அமைக்கவும் கோரிக்கைகள் குவிகின்றனவாம்.

போடோலாந்து

அதேபோல அஸ்ஸாமைப் பிரித்து போடோலாந்து உருவாக்கவும் கோரிக்கை வந்துள்ளதாம்.

மிதிலாஞ்சல்

பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து மைதிலி மொழி பேசும் பிராந்தியத்தைப் பிரித்து மிதிலாஞ்சல் மாநிலம் உருவாக்கும் கோரிக்கையும் வந்துள்ளதாம்.

செளராஷ்டிரா மாநிலம்

குஜராத்திலிருந்து செளராஷ்டிரா மொழி பேசும் பகுதியைப் பிரித்து செளராஷ்டிரா மாநிலம் அமைக்கும் கோரிக்கையும் முளைத்துள்ளது.

கர்நாடகம்- கிழக்கு கேரளாவைப் பிரித்து கொங்குநாடு

தமிழகத்தின் தென் மேற்கு, கர்நாடகத்தின் தென் கிழக்கு, கேரளத்தின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து கொங்குநாடு மாநிலம் அமைக்கும் கோரிக்கையும் எழுந்துள்ளதாம்.

இந்தியாவில் இதுவரை 28 மாநிலங்கள் - 7 யூனியன் பிரதேசங்கள்

இந்தியாவில் இதுவரை 28 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. 29வது மாநிலமாக தெலுங்கானா உருவாகவுள்ளது.

இப்படியே போனா....

தற்போதைய தனி மாநிலக் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்பதாக இருந்தால் 50 மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+