ராஜ்யசபாவுக்கு வந்தார் சச்சின்... காலரியில் அமர்ந்து ரசித்தார் மனைவி அஞ்சலி
டெல்லி: சச்சின் டெண்டுல்கர் இன்று ராஜ்யசபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை அவரது மனைவி அஞ்சலி பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கண்டு களித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் சச்சின் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இன்று தொடங்கிய ராஜ்யசபாவின் மழைக்காலக் கூட்டத் தொடரில் சச்சின் பங்கேற்றார்.

முதல் விளையாட்டு வீரர்
தொடர்ந்து விளையாடி வரும் வீரர் ராஜ்யசபா எம்.பியாக நியமிக்கப்பட்டது சச்சின் மட்டும்தான்.

ரேகாவுடன் சேர்த்து
பழம்பெரும் நடிகை ரேகா, அனு ஆகா ஆகியோருடன் சேர்த்து ராஜ்யசபாவுக்கு நியமிக்கப்பட்டார் சச்சின்.

நீல நிற சட்டையில்
இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை நீல நிறத்திலானது. அதேபோல இன்று ராஜ்யசபாவுக்கு வந்த சச்சினும் நீல நிற உடையில் காணப்பட்டார்.

கூட வந்த சுக்லா
சச்சினுடன், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகியும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சுக்லாவும் உடன் வந்தார்.

பார்வையாளர் மாடத்தில் அஞ்சலி
சச்சினின் மனைவி அஞ்சலி பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி சச்சின் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டதைப் பார்த்து ரசித்தார்.

அமளி துமளி.. வேடிக்கை பார்த்த சச்சின்
முதல் நாள் கூட்டத்தில் கூட்டம் தொடங்கியதுமே எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டு அவையும் ஒத்திவைக்கப்பட்டது. அதை சச்சின் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

பிரதமருடன் கை குலுக்கல்
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்த சச்சின், அவரிடம் சென்று கை குலுக்கி வணக்கம் வைத்தார்.

மேசைகளைத் தட்டி பாராட்டு
முன்னதாக சபைக் கூட்டம் தொடங்கியதுமே சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணிக்குப் பாராட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி வரவேற்றனர். சச்சினும் மேசையைத் தட்டத் தவறவில்லை.












Click it and Unblock the Notifications