கூர்க்காலாந்து கோரி 4வது நாளாக முழு அடைப்பு!
டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலத்தைப் பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி டார்ஜிலிங் மலைப் பிரதேசத்தில் 4வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
தெலுங்கானாவைத் தொடர்ந்து கூர்க்காலாந்து தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்தது. இந்தப் போராட்டம் இன்று 4வது நாளாக நீடிக்கிறது.
கடைகள், சந்தைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடைபெறுகின்றன.
முக்கிய நகரங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டு மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இருப்பினும் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு பணிகள் வழக்கம் போல் நடைபெற்றன.
தனிமாநிலத்தை வலியுறுத்தி, ஏழு நாள்களுக்கு முன்பு தீக்குளித்து, சிலிகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சனிக்கிழமை உயிரிழந்த மங்கள் சிங் ராஜ்புத் உடலுடன் நேற்று மெüன ஊர்வலம் நடத்தப்பட்டது.
மேலும் நேற்று மாலை மலைப் பிரதேசம் முழுவதும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் நடத்தப்பட்டது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications