கோரிக்கையோடு சென்ற நாஞ்சில் சம்பத்: நாவல் கொடுத்து அனுப்பிய அமைச்சர்
சென்னை: அமைச்சர் ஒருவரை பார்க்க சென்ற நாஞ்சில் சம்பத்திற்கு தமிழ் நாவல் இரண்டை பரிசாக கொடுத்து அனுப்பி வைத்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அவருக்கும் அக்கட்சியின் தலைவர் வைகோவிற்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அவருக்கு துணை கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா கவுரவித்தார். நாஞ்சில் சம்பத் மீது அரசு தொடுத்த அவதூறு வழக்குகளை வாபஸ் பெற உத்தரவிட்டார்.
மேலும், நாஞ்சில் சம்பத் மகள் மதிவதனிக்கும், ஆனந்த் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு, சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு ஜெயலலிதா நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அந்த அளவு நாஞ்சில் சம்பத் மீது ஜெயலலிதா மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் முக்கியான இடத்தில் அமைச்சர் ஒருவரை பார்க்க நாஞ்சில் சம்பத் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் அவரது உறவினர் ஒருவரின் நியாயமான கோரிக்கையை எடுத்துக் கூறி, அதன் மீது விரைந்து நவடிக்கை எடுக்க வேண்டியுள்ளார்.
நாஞ்சில் சம்பத் கூறிய அனைத்து கருத்துக்களையும் மிகவும் கவனமாக கேட்டுக் கொண்ட அந்த அமைச்சர், நாஞ்சில் விடைபெரும் போது, அழகிய இரு தமிழ் நாவல்களை கொடுத்து வழி அனுப்பி வைத்தாராம். ஆனால் கடைசி வரை அவரது கோரிக்கையை ஏற்கவில்லையாம்.
அமைதியாக நாவலை படித்துக் கொண்டு இருங்க, என்னை சும்மா வந்து தொந்தரவு செய்யாதீங்க என்ற அர்தத்தில் அவற்றை கொடுத்து அனுப்பினாராம்.
இந்த விவாகரம் தற்போது செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றும், கேட்க வேண்டியவர் காதுக்கு சென்றுவிட்டதாக தகவல்.












Click it and Unblock the Notifications