திகார் சிறையில் பவர்ஸ்டார்… ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
வேலூர்: வேலூர் சிறை அதிகாரிகள், நன்னடத்தை சான்று வழங்காததால், நடிகர், சீனிவாசன், டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த, தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன், வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால், கடந்த, ஏப்ரல், 26ம் தேதி, வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம், ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டெல்லி போலீசார் கடந்த ஜூன், 4ம் தேதி, அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைத்தனர்.

6 வழக்குகளில் ஜாமீன்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட, ஆறு வழக்குகளில் இருந்து, ஜாமினில் விடுவிக்க, பிணயத் தொகை செலுத்தி உள்ளனர். இந்த ஆவணங்கள், டெல்லி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நன்னடத்தை சான்றிதழ்
டெல்லி வழக்கிலும், ஜாமின் பெற முயற்சி நடக்கிறது. வேலூர் சிறையில் இருந்த போது, அவருக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கினால் தான், திகார் சிறையில், ஜாமின் கிடைக்கும்.

அதிகாரிகள் மறுப்பு
இதனால், வேலூர் சிறையில், நன்னடத்தை சான்றிதழ் வாங்க முயற்சி நடந்தது; சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனால், திகார் சிறையில் இருந்து, பவர்ஸ்டார் சீனிவாசன் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

100 நாட்களை கடந்து
பவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது திகார் சிறை வாழ்க்கை 100 நாட்களை தாண்டிவிடுமா என்பது வேலூர் அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications