இரண்டு திருமணங்கள்… முதல் மனைவி புகாரால் தலைமறைவான தாசில்தார் !
ராமநாதபுரம்: இரண்டாவது திருமணம் செய்த துணை தாசில்தார் மீது முதல் மனைவி போலீசில் புகார் செய்யவே தலைமறைவாகிவிட்டார் தாசில்தார்.
சிவங்கை மாவட்டம், ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் சிவக்குமார்( 43). இவரது முதல் மனைவி அமுதா (37). ஆரம்ப பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த, 1999 ம் வருடம் தடபுடலாக உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் தாம்பத்திய வாழ்கைக்கு சாட்சியாக இரண்டு அழகிய குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே திடீரென கருத்து மோசல் ஏற்பட்டது. இந்த மோசல் அடிக்கடி ஏற்பட்டு, ஏது குடும்ப தகராறில் முடிந்தது. இதனால், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிவக்குமார் தற்போது திருவாடானையில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகின்றார். இவர், முதுகுளத்தூரில் பணிபுரிந்த போது, ராஜேஸ்வரி என்பவரை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டாதாக கூறப்படுகின்றது.
இந்த தகவல் முதல் மனைவியான அமுதாவிற்கு தெரிய வர, இது குறித்து, அமுதா, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் துணை தாசில்தார் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் பதிவு செய்தனர்.
இந்த தகவல் அறிந்த துணை தாசில்தார் சிவக்குமர் தலைமறைவானார். இதனால் , சிவக்குமாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications