வீழ்ந்த ரூபாய் மதிப்பு.. டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் நெருக்குதல்
Subscribe to Oneindia Tamil

இதனால் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதிக்கும் என்று தெரிகிறது. டீசல் விலை உயர்ந்தால் பெரும் பாதிப்பை மக்கள் சந்திக்கும் அபாயமும் எழுந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப நாட்களாக கிடுகிடுவென வீழ்ந்து வந்தது தற்போது 12 சதவீதம் வரை வீழ்ந்து விட்டது. இதனால் டீசல் விலையைலிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்தியாக வேண்டும் என்று மத்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகிறதாம்.
தற்போது மாதம் 50 பைசா வரை உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் தற்போதைய ரூபாய் மதிப்பு இழப்பால் ரூ. 2 முதல் ரூ. 3 வரை டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிவருகின்றனவாம்.
இதை மத்திய அரசு ஏற்றால் விரைவில் டீசல் விலை கிடுகிடு உயர்வை சந்திக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications