தேமுதிகவை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி: இல.கணேசன் குற்றச்சாட்டு

அனைத்து மத மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி நீலகிரி மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதவாத சக்திகள் ஆட்சி அமைக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய மாணவ, மாணவியருக்கு மட்டும் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் காங்கிரஸ் அரசு மதரீதியான பிரிவினையை தூண்டி வருகிறது என்பது தெளிவாக தெரிய வருகின்றது.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் பட்சத்தில், அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை பாராபட்சம் இன்றி வழங்கப்படும். நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தேச விரோத சக்திகளை நரேந்திர மோடி பிரதமராகும் போது நிச்சயம் முறியடிப்பார்.
பாஜக பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் கட்சி அல்ல. ஆனால் ஆங்காங்கே நடக்கும் குண்டு வெடிப்பு, கொலை போன்ற சம்பவங்களை அரசியலாக்கி, மக்களின் செல்வாக்கை பெற காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் முயற்சி செய்கின்றன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பூத் கமிட்டிகள் முழு வீச்சில் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் பாஜக எதிர்க்கிறது. ஆனால் நல்ல கொள்கையுடய தேமுதிகவை நாங்கள் வரவேற்கிறோம். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியதன் மூலம் தேமுதிகவை காங்கிரஸ் தனது பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றது என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications