உ.பி.: 22 வயது பெண்ணை நண்பனுடன் சேர்ந்து கற்பழித்த ஹவுஸ் ஓனர் மகன்
Subscribe to Oneindia Tamil

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷி(27). அவரது தந்தை சுமார் 30 முதல் 35 அறைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு பகுதியில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த 22 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
அவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் அவரை ரிஷியும், அவரது நண்பரும் சேர்ந்து காரில் கடத்தி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் அப்பெண்ணை கற்பழித்தனர். மேலும் இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் அவ்வளவு தான் என்றும் மிரட்டியுள்ளனர்.
அப்பெண் நடந்த சம்பவம் குறித்து தனது சகோதரரிடம் தெரிவித்தார். உடனே அவர் இது குறித்து கவி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் ரிஷி மற்றும் ராஜூ மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications