'பைல்' எங்கே, அதை முதலில் சொல்லுங்க.. பாஜக அடம்.. பிரதமரின் 'டின்னர்' வேஸ்ட்!
டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கின் கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் வைத்த இரவு விருந்துப் பேச்சுவார்த்தை வீணாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பின் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று விருந்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்த பாஜக திட்டவட்டமாக கூறி விட்டது.
நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடைய முக்கியக் கோப்புகள் மாயமான விவகாரம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பி வருகிறது பாஜக. இன்றும் கூட இந்த விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

இந்த நிலையில் இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டுவதற்காகவும், நாடாளுமன்றம் செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியும் நேற்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இதில் மூத்த பாஜக தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் போன்றோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது நாடாளுமன்றம் சுமூகமாக இயங்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் ஓய்வூதிய மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை பிரச்சினையின்றி நிறைவேற்ற உதவிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.
கோப்புகள் காணாமல் போனது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் பின்வாங்குவதில்லை என்று பாஜக அறிவித்துள்ளது. அதன்படியே இன்றும் நாடாளுமன்றத்தில் அக்கட்சி பிரச்சினை கிளப்பியது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications