For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிஸ் வேர்ல்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக.. 'பிகினி'க்கு டாட்டா!

Google Oneindia Tamil News

ஜகார்த்தா: மிஸ் வேர்ல்ட் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக பிகினி உடைப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், இந்தோனேசியாவில் இப்போட்டி நடைபெறுவதால்.

இந்தோனேசியா முஸ்லீம் நாடாகும். இங்கு பிகினி உடைக்கு அனுமதி கிடையாது. எனவே இதுதொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு தாங்களாகவே பிகினி உடைப் போட்டியை மட்டும் மிஸ் வேர்ல்ட் போட்டி அமைப்பாளர்கள் நீக்கியுள்ளனர்.

பீச்சுப் பக்கம் போகாதீங்க..

பீச்சுப் பக்கம் போகாதீங்க..

கடற்கரையில் நீச்சல் உடையில் அழகிகளின் வனப்பை எடை போடும் போட்டியை மட்டும் மிஸ் வேர்ல்ட் அமைப்பாளர்கள் நீக்கியுள்ளனராம்.

இந்த ஆண்டு மட்டும்

இந்த ஆண்டு மட்டும்

இதுகுறித்து போட்டி அமைப்பாளர்கள் கூறுகையில், இந்தோனேசியாவின் பாரம்பரியம், மரபு, பழக்க வழக்கம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீச்சல் உடைப் போட்டி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இது இருக்காது. இது முக்கியப் பிரச்சினை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றனர்.

பாலியில் போராட்டம்

பாலியில் போராட்டம்

போட்டி நடைபெறும் இடம் பாலி தீவாகும். அங்கு முஸ்லீம் அமைப்புகள் சில மிஸ் வேர்ல்ட் போட்டியை எதிர்த்துப் போராட்டம் நடத்தின. ஆனால் தாங்கள் யாரையும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம் என்று மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரான ஜூலியா மோர்லி கூறியுள்ளார்.

அதுக்குப் பதிலா இது இருக்குமாம்...

அதுக்குப் பதிலா இது இருக்குமாம்...

அதேசமயம், பீச் பாடி போட்டிப் பிரிவு கைவிடப்படலையாம். நீச்சல் உடைக்குப் பதில் உடம்பு அதிகம் தெரியாத வகையிலான உடையை அணிந்து போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்களாம்.

இந்தியாவிலிருந்து நவ்னீத் கெளர் தில்லான்

இந்தியாவிலிருந்து நவ்னீத் கெளர் தில்லான்

இந்த அழகிப் போட்டியில் இந்தியாவிலிருந்து நவ்னீத் கெளர் தில்லான் பங்கேற்றுள்ளார். செப்டம்பர் 20ம் தேதி இந்தப் போட்டியின் இறுதிச் சுர்று சென்டுல் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும்.

இந்தோனேசியாவில் முதல் முறையாக

இந்தோனேசியாவில் முதல் முறையாக

இந்தோனேசியா முதல் முறையாக மிஸ் வேர்ல்ட் போட்டியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
For the first time in history, Miss World contestants will not appear in bikinis. The pageant organisers have called off the beach fashion segment from the contest to respect the sentiments of the Muslim-majority nation. The official broadcaster and organiser of Miss World 2013 in Indonesia said, "There will be no bikini in this year's Miss World pageant to respect our traditional customs and values. This is a sensitive issue in Indonesia".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X