படிக்காமல் சிறுவயதில் எருமைமாடு மேய்த்தேன்...: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
ஷிமோகா: சிறுவயதில் படிக்காமல் மாடு மேய்த்த தன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து சிறந்த மனிதனாக மாற்றியது தனது ஆசிரியர் தான் என ஆசிரியர் தின விழாவில் தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
நேற்று, கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறு வயது பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தார்.
விழாவில் அவர் கூறியதாவது....

எருமை மேய்த்தேன்....
‘என்னுடைய சிறிய வயதில் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்றதில்லை. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் எருமைகளை மேய்ப்பதற்காக சென்று விடுவேன்.

பேப்பர் சிகரெட்...
அப்போது பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பீடி, சிகரெட் வாங்க காசு கிடைக்கவில்லை என்றால், பேப்பரை சிகரெட் போல் சுருட்டி புகைத்தேன்.

ராஜப்பா...
ஆனால் ராஜப்பா என்கிற ஆசிரியர் என்னையும், என்னுடன் இருந்த 3 பேரையும் அழைத்து வந்து நேரிடையாக 5,ம் வகுப்பில் சேர்த்து படிக்க செய்தார்.

சரியான பாதை....
பாதை தவறிய என்னை மறுபடியும் சரியான வழியில் கொண்டு வந்து, இந்த அளவிற்கு உயர்வதற்கு காரணமான ஆசிரியர் ராஜப்பாவை வணங்குகிறேன்' எனத் தெரிவித்தார் சித்தராமையா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications