“நெஞ்சு கரிச்சா இஞ்சி முறப்பா சாப்பிடுறதும்… அமாவாசைன்னா அமைச்சர் பதவி பறிபோறதும் சகஜம்தானேப்பா!
சென்னை: அமாவாசை வந்தாலே யாருக்கு திகிலடிக்கிறதோ இல்லையோ தமிழக அமைச்சர்களுக்கு திகிலடிக்க ஆரம்பித்துவிடுகிறது.
காரணம் யாருடைய பதவிக்கு ஆப்பு வருமோ என்றுதான். நேற்றைய அமாவாசை தினத்தில் வைகைச் செல்வனின் அமைச்சர் பதவியை பறித்து மீண்டும் அமாவாசை பற்றிய அமைச்சர்களின் நம்பிக்கையை உண்மையாக்கியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் தமிழக முதல்வராக 3 வது முறையாக பதவியேற்றார் முதல்வர் ஜெயலலிதா. அப்போது அமைச்சராக பதவியேற்றவர்களில் ஒ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் என பழகிய ஒரு சில அமைச்சர்களைத் தவிர பெரும்பாலோனோர் புதிய முகங்கள்.

2 ஆண்டு நிறைவு
2011 மே மாதம் பதவி ஏற்ற அமைச்சர்களில் எத்தனைபேர் அதே துறையில் அமைச்சராக இருக்கிறார்கள்? எத்தனைபேர் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கே தெரியாது.
யார் எந்த துறைக்கு அமைச்சர் என்பது கொஞ்சம் குழப்பமான விசயம்தான். ஏனெனில் இந்த அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டு முடிந்து 3 வது ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

11 முறை மாற்றம்
இதுவரை 11 முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது. சட்டத்துறையிலும், பள்ளிக்கல்வித்துறையிலும் அமைச்சராக பதவியேற்றவர்கள்தான் அதிக அளவில் பந்தாடப்பட்டுள்ளனர்.

அமாவாசையா? அ’ம்’மாவாசையா?
அமாவாசை தினத்தில், அமைச்சரவை மாற்றம் அதிரடியாக நிகழும், புதிய அமைச்சரவையில் இடம் பெற, எந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்ற எதிர்பார்ப்பு அவ்வப்போது எழுவதுண்டு. ஆடி அமாவாசை தினத்திலேயே அமைச்சரவை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டு எதிர்பாராமல் அமைச்சர் பதவியை பறித்துள்ளார் முதல்வர்.

கொடநாட்டிலேயே பேச்சு
கொட நாட்டிலிருந்து சென்னைக்கு முதல்வர் ஜெயலலிதா திரும்பியதும், அமைச்சரவை மாற்றம் உறுதி என, ஆளுங்கட்சி வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இரண்டு, மூன்று பேரின் தலை உருளும் என்று கூறப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரியில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக பதவியேற்ற வைகைச்செல்வன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கூடவே கட்சிப் பொருப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அமாவாசையில் முடிவு
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது முக்கியமான முடிவுகளை அமாவாசை நாளில்தான் எடுக்கிறார் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஜெயலலிதா எப்பொழுதும் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்தான். அதனால் அவரது ஒவ்வொரு அதிரடி முடிவின் பின்னாலும் ஒரு ஜோதிட காரணம் கூறப்படுவதுண்டு. கடந்த சில மாதங்களாகவே ஜெயலலிதா மேற்கொள்ளும் மாற்றங்கள் பொதுவாக அமாவாசையில்தான் நடந்தேறுகின்றனர்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு
கடந்த ஆண்டு ஆடி அமாவாசையை ஒட்டி அமைச்சராக இருந்த செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது. கட்சிப் பொறுப்பும் பறிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டார்.

அமாவாசை என்றாலே
மொத்தத்தில் அமாவாசை வந்தாலே யாருக்கு `லக்' அடிக்கிறதோ, யாருக்கு `லபக்' அடிக்கிறதோ. ஆகமொத்தம், எல்லாருக்கும் `லக் பக், லக் பக்' என்றுதான் அமைச்சர்களின் இதயம் அடித்துக் கொண்டிருக்கிறது.
"நெஞ்சு கரிச்சா இஞ்சி முறப்பா சாப்பிடுறதும்... அமாவாசைன்னா அமைச்சர் பதவி பறிபோறதும் சகஜம்தானேப்பா!"( பெரியகருப்பத்தேவர் பாணியில் படிக்கவும்)
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications