வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. 21 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்! டாப் ஐஏஎஸ் அதிகாரி மீது புகார்
போர்ட் பிளேர்: அந்தமானில் 21 இளம் பெண் ஒருவர் டாப் அரசு அதிகாரிகள் மீது கொடுத்துள்ள கூட்டுப் பாலியல் வன்புணர்வு புகார் அதிர வைப்பதாக உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதுவும் சமீப காலங்களில் பாலியல் குற்றங்கள் கணிசமாக அதிகரித்தே உள்ளது.
மிகவும் பவர்புல் இடத்தில் இருக்கும் அதிகாரிகள் சிலர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுகிறார்கள். அப்படியொரு ஷாக் புகார் தான் அந்தமானில் இருந்து கிளம்பி உள்ளது.

புகார்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் யூனியன் தலைநகரான போர்ட் பிளேயரை சேர்ந்த பெண் ஒருவர தான் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகப் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் ஐஏஎஸ் அதிகாரி உட்பட இரு அதிகாரிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்து உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஆகும்

வழக்குப்பதிவு
21 வயதான அந்த பெண்ணின் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தொழிலாளர் அதிகாரி ஒருவர் மீது அவர் பாலியல் பலாத்கார புகாரை அளித்து உள்ளார். அந்த பெண் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இது தொடர்பாகப் புகார் அளித்த நிலையில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி போர்ட் பிளேயரில் உள்ள அபெர்டீன் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

யார் அவர்கள்
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் மற்றும் அந்தமான் தீவுகளில் தொழிலாளர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்எல் ரிஷி என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரது பெயர்களும் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த பெண் அளித்த கூட்டுப் பாலியல் பலாத்கார புகாரை விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
இருவரும் மிகவும் பவர்புல் அதிகாரிகள் என்பதால் அந்த பெண் அச்சத்தில் உள்ளார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு உள்ளது. ஐஏஎஸ் அதிகாரியான நரேன் இப்போது டெல்லி நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் பிரதமர் அலுவலகத்திற்கும் விளக்கம் அளித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள்
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் நரேனின் அந்தமான் இல்லத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். போர்ட் பிளேயரில் உள்ள அந்த ஐஏஎஸ் அதிகாரியின் இல்லத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு முறை பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக அந்த எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது
அந்த பெண் அளித்துள்ள புகாரில், "நான் வேலை தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது தான் எனக்குத் தொழிலாளர் ஆணையர் ஆர்.எல்.ரிஷியை சிலர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவர் நரேனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு அரசு வேலை தருவதாக உறுதி அளித்தனர். மேலும், மது குடிக்கவும் கட்டாயப்படுத்தினர். இருப்பினும், நான் மறுத்த நிலையில், அவர்கள் என்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்தனர்" என்று அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.

மிரட்டல்
இந்தச் சம்பவம் நடந்து இரு வாரங்களுக்குப் பின், மீண்டும் இரவு 9 மணிக்குத் தலைமைச் செயலாளரின் இல்லத்தில் இருந்து தனக்குக் கால் வந்ததாகவும் அப்போது மீண்டும் தன்னை அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் தெரிவித்தார். அதன் பின்னர் அரசு வேலை வாங்கி தர மறுத்த அவர்கள், இந்த விஷயத்தைப் பற்றி யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாகவும் தனது புகாரில் தெரிவித்து உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications