குவாட்டரில் பாம்பு.. முதல் ரவுண்டில் ஒன்றும் தெரியல.. 2வது ரவுண்டில்.. அலறிய விவசாயி!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வாங்கிய குவார்ட்டர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது. அந்த மதுவை குடித்த விவசாயி மயக்கம் அடைந்தார்.
Recommended Video
இது குறித்து அந்த நபர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவது குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். சோமசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (36). இவர் திருமணம் செய்த சுத்தமல்லி கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் தங்கி நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

முதல் ரவுண்டு
விவசாயியான சுரேஷ் அடிக்கடி மது அருந்துவது உண்டு. நேற்று தமிழ் வருடப்பிறப்பு என்பதால் மது அருந்த எண்ணிய சுரேஷ் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி பாதியை அருந்திவிட்டு மீதியை வைத்துள்ளார்

பாம்புக்குட்டி
முதல் சுற்று முடிந்தபின், மீதமுள்ள மதுவை அருந்துவதற்காக மது பாட்டிலை பார்த்தபோது மதுபாட்டிலில் குட்டி பாம்பு ஒன்று இருந்ததை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரசு டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கேட்டபோது முறையாக அவர்கள் பதில் கூறவில்லையாம்.

பதற்றம்
இந்நிலையில் பாம்பு இருந்த மதுவை அருந்தி விட்டோமே என அதிர்ச்சியில் சுரேஷ் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷயத்தை கூறினார். உடனடியாக அவர்கள் சுரேசை சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
தற்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவது குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications