Vijay: சிஎம் சார்.. மரியாதை கொடுத்து பேசினாலும் தவறாக தான் நினைக்கிறாங்க.. அரியலூரில் விஜய் ரிப்பீட்
அரியலூர்: திருச்சியே அதிரும் வகையில் விஜய்யின் (Vijay Ariyalur) முதல் மக்கள் பயணம் இருந்தது. தொடர்ந்து அரியலூரில் திருச்சியைப் போலவே மக்கள் வெள்ளத்தில் விஜய்யின் பரப்புரை வாகனம் மிதந்து வந்தது. இரவு நேரம் ஆனாலும் விஜய்யை பார்க்க வேண்டும் காத்திருந்த மக்கள் வெள்ளம் முன்பு விஜய் பிரசாரம் செய்தார். அப்போது அவர், அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? அதற்காக வரவில்லை. பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று கூறினார்.
திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலை முன்பு பரப்புரை செய்த நிலையில் அரியலூர் அண்ணா சிலை முன்பு பரப்புரை செய்கிறார் விஜய். விஜய்யின் வாகனம் அரியலூர் வந்தடைந்தது. மதியம் 1.30 மணியளவில் பரப்புரை செய்வதாக இருந்த நிலையில், திருச்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது 8 மணியளவில் பரப்புரை செய்கிறார்.

திருச்சியில் இருந்து அரியலூர் வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். அரியலூர் வந்தடைந்ததும், தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது விஜய் பஸ்சில் இருந்தபடியே கை காண்பித்தபடி வந்தார். தொடர்ந்து மக்கள் கூட்டத்துக்கு முன்பு விஜய் பேசியதாவது:-
உங்களுடைவிட.. உங்களின் பாசத்தை விட.. உங்களின் அன்பை விட இந்த உலகத்தில் எனக்கு வேற எதுவும் பெரியதாக தெரியவில்லை. சாதாரணமாக இருந்த இந்த விஜயை இவ்வளவு பெரிய உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டு இருக்கீங்க.. உங்கள் வீட்ல ஒருத்தராகவே மாத்திட்டீங்க.. உங்க சொந்தக்காரனாகவே மாத்திட்டீங்க..
என்னங்க பெரிய பணம்.. பணம் வேணுங்கிற அளவுக்கு அளவுக்கு பாத்தாச்சு.. அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? அதுக்கு கொஞ்சம் கூட அவசியம் இல்லை.. எனக்கு எல்லாத்தையும், எல்லாமும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதை விட எனக்கு வேற என்ன வேலை? எந்த எண்ணமும் இல்லை. "விஜய், விஜய் அண்ணா, நம்ம விஜய், நம்ம விஜி"ன்னு இருந்துவிடுவான் என்று பார்த்தால்.. எப்போ பார்த்தாலும் மக்களோட மக்களாக, மக்கள் கடலோடு மக்கள் கடலாகவே இருக்கிறானே என்பதாலும், எதிரிகள் நம்மளை பற்றி கண்ணாப்பிண்ணான்'னு பேச ஆரம்பிச்சிட்டாங்க..
நான் மரியாதையோடு பேசினால் கூட.. பாசமாக பேசினால் கூட தவறாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. அதனால், நம்ம அண்ணா சொல்வதை போல "வாழ்க வசவாளர்கள்".. என்று சொல்லிக்கொள்கிறேன். நான் மதுரை மாநாட்டில் உங்கள் எல்லாரையும் நேரில் சந்திக்க வர்றேன் என்று சொல்லியிருந்தேன். இப்போது, இன்று உங்களுக்காக நம்மளை மேலேயும், கீழேயும் ரொம்ப மோசமாக ஆண்டுக் கொண்டிருக்கும் பாசிச பாஜக அரசையும், பாய்சன் திமுக அரசையும் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்.
திமுக அரசு நம்ப வைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. 525 வாக்குறுதிகளை கொடுத்தீங்க நிறைவேற்றினீர்களா.. சிஎம் சார்? என்று விஜய் பேசினார்.
திருச்சியில் பேசிய விஜய், போர் என்றால் குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்வார்கள். நான் உங்களை குலதெய்வமாக நினைத்து மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெறுவது ஜனநாயக போர். திருச்சி என்றாலே திருப்புமுனை தான். திருச்சியில் தொடங்கின எல்லாமே திருப்புமுனையாக அமையும்னு சொல்வாங்க.
திமுக பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துள்ளது. டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப்பணியில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்.. திமுகவினரிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை..
பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ஓசி, ஓசி என சொல்லிக் காட்டுகிறார்கள். மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கொடுக்கவில்லை. நாங்கள் பொய் வாக்குறுதிகள் கொடுக்க மாட்டோம். நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம். பெண்கள் பாதுகாப்பு, சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பில் NO COMPROMISE. என்று பேசியிருந்தார்.
-
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
அதைத் தாண்டி யாரும் வரக்கூடாது.. திருப்பூர் கூட்டத்தில் திடீரென டென்ஷனான விஜய் -
அனுபவம் இல்லாதவரிடம் நாட்டை கொடுக்காதீங்க.. பெரம்பூருக்கே போய் விஜய்யை அட்டாக் செய்த திவ்யா சத்யராஜ் -
ஜனநாயகன் லீக் செய்தது விஜயா? மனசாட்சி வேண்டும்! 500 கோடி! ஆதங்கத்துடன் பேசிய பிக் பாஸ் பிரஜன் -
ஜனநாயகன் படம் லீக்.. சென்னை ஹைகோர்ட்டில் படக்குழு முறையீடு! நீதிபதி சொன்ன வார்த்தை -
தவெகவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ? நிலைமை என்ன ஆகும்? - சட்டசபையில் சமாளிப்பாரா விஜய்? -
பவன் பாதி.. ஜெகன் மீதி! அரசியலிலும் ரீமேக்கா? வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு? -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
மீண்டும் மீண்டுமா.. பிரசார வேனில் தொங்கிய தவெக தொண்டர்.. பவுன்சர் செய்த காரியம் -
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி -
வில்லிவாக்கத்தில் இழுபறி.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஜாக்பாட்? முக்கிய பிரச்சனையே இதுதான்! -
விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு!












Click it and Unblock the Notifications