Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛300க்கு 315 மதிப்பெண்’’..தாராளம் காட்டிய பெங்களூர் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம்! கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழத்தில் நடந்த தேர்வில் மாணவர்களுக்கு 300க்கும் 310, 315 மதிப்பெண்கள் போடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் கற்றல் திறனை தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண்கள் தான் நிர்ணயம் செய்கின்றன. சில நேரங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகளில் அதிகபட்சம் என நிர்ணயிக்கப்பட்டவை விட சிலருக்கு கூடுதல் மதிப்பெண்கள் போடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

315 Out Of 300 Bangalore Rajiv Gandhi University Nursing Students score more than Maximum mark In Exam

அந்த வகையில் தான் தற்போது பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு 300க்கு 310, 315 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த சம்பவம் குறித்த விபரம் வருமாறு:

பெங்களூரில் ராஜீவ் காந்தி ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு நர்சிங் படிப்புகளை ஏராளமானவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்சிங் படிப்போருக்கு 2வது செமஸ்டர் தேர்வு நடந்து முடிந்தது.

இந்த தேர்வு முடிவுகள் பல்கலைக்கழகம் சார்பில் வெளியடப்பட்டது. அப்போது தான் அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. அதாவது தேர்வு எழுதிய 2 பேர் 300க்கு 310, 315 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். இதுபற்றி மாணவி ஒருவர் கூறுகையில், ‛‛இந்த சம்பவம் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. என்னுடன் பயிலும் 2 பேர் 300க்கும் 310, 315 மதிப்பெண்களை எடுத்துள்ளனர்'' என்றார்.

மேலும் இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவிய நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து உடனடியாக தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டதோடு, மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. அதன்பிறகு 300க்கு 310, 315 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. அப்போது சில மாணவர்களின் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன. ஒருவர் முதலில் 275 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் திருத்தப்பட்ட தேர்வு முடிவில் அவரது மதிப்பெண் என்பது 227 என குறைந்தது.

இந்த பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்த தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு செமஸ்டர் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறையை மாற்றியது தான் குழப்பத்துக்கு காரணம் என மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுபற்றி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (மதிப்பீடு) ரியாஸ் பாஷா கூறுகையில், ‛‛துணைப்பாடத்தின் மதிப்பெண்கள் தவறுதலாக கூட்டப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் மொத்த மதிப்பெண் என்பது 300யை விட அதிகரித்துள்ளது. இது எங்களின் கவனத்துக்கு வந்ததும், அதனை திருத்தி வெளியிட்டுள்ளோம் இந்த திருத்தப்பட்ட ரிசல்ட் வெளியிட்டாலும் கூட மாணவர்களின் கிரேட் வரிசையில் எந்த வரிசையிலும் மாற்றம் ஏற்படவில்லை. பல்கலைகழகத்தில் செமஸ்டர் முறை தேர்வுகள் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளதால் சில குழப்பங்கள் இருந்தன. தற்போது அதற்கும் தீர்வு கண்டுள்ளோம்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+