சவுக்கு சங்கரை விட சீமான் அட்டூழியம் செய்துகிட்டு இருக்காரு.. கொந்தளித்த பிரபல நடிகை
பெங்களூர்: சவுக்கு சங்கரை விட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அட்டூழியம் செய்து கொண்டிருப்பதாக பிரபல நடிகை வீடியோவில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த நடிகை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: யாரோ ஒருவர் என் பெயரை குறிப்பிட்டு "நான் வால் வால் என கத்திக் கொண்டிருந்ததாகவும் நான் எங்கே போனேன் என தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போன வாரம்தான் சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் விமர்சித்து ஒரு வீடியோ போட்டேன். எதற்கெடுத்தாலும் அவசர வழக்காக விசாரிங்கன்னு சீமான் கேட்பாரே, என்னுடைய வழக்கை தள்ளுபடி செய்யச் சொல்லி ஹைகோர்ட்டில் சீமான் ஒரு வழக்கு தாக்கல் செய்திருக்கிறாரே அந்த வழக்கு விசாரணைக்கு வந்தால்தானே என்னால் ஏதாவது பேச முடியும் என கூறியே ஒரு வீடியோவை போட்டேனே என்னை கேள்வி கேட்கும் நபர் அதை பார்க்கவில்லையா?
எதற்காக சும்மா என் பெயரை இழுக்குறீங்க! நான் என்ன செய்ய முடியும். நான் வழக்கு கொடுத்துவிட்டேன். எனது போன், வழக்கு தொடர்பான ஆவணங்கள் எல்லாமே தமிழக போலீஸாரிடம் இருக்கிறது. நான் போலீஸிடம் கேட்டால் அவர்களோ, "மேடம் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய கேஸை சீமான் ஹைகோர்ட்டிற்கு வரவிட்டால்தான் ஏதாவது செய்ய முடியும்" என்கிறார்கள்.
சரி சீமான் தரப்பிடம் கேட்டால், இந்த வழக்கை திமுக எடுக்கவே மாட்டார்கள், நாங்கள் எல்லாம் கூட்டுக் குடும்பம் போல் சந்தோஷமாக இருக்கிறோம் என்கிறார்கள். சாகற வரைக்கும் போன என்னை இன்று காப்பாற்றி வைத்திருப்பது கர்நாடகா மக்கள்தான். தமிழகத்தில் இருந்து யாரும் வரவில்லை.
சீமான் மீதான புகார் குறித்து ஃபாலோ செய்வது மட்டும்தான் என்னோட வேலை என நினைத்துக் கொள்ளாதீங்க. தமிழகத்தில் என்னோட ஆட்சியா நடக்குது. எதற்கு என் பெயரை சொல்றீங்க! சவுக்கு சங்கரை விட சீமான்தான் 14 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிகிட்டு அட்டூழியம் செய்துகிட்டு இருக்காரு!
நான் சீமானுக்கு எதிராக போராடிக் கொண்டே தான் இருக்கிறேன். இந்த விஷயத்தில் காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் என்ன தமிழகத்தில் வந்து ரோடு ரோடாக உருண்டு புரண்டு அழவா முடியும்? என்னை பற்றி பேசுவதற்கு முன்பு மனசாட்சியுடன் பேசுங்கள். தமிழ் பெண்ணை ஒரு தமிழ் போராளி இப்படி செய்ததற்கு தமிழகமே தலைகுனியணும். இவ்வாறு அந்த நடிகை வீடியோவில் பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் சில திரைப்படங்களில் நடித்து இயக்கியுள்ளார். இவ்வாறு கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் இயக்கி ஒரு படத்தில் கர்நாடகாவை சேர்ந்த நடிகை நடித்திருந்தார். அப்போது தங்களுக்குள் காதல் ஏற்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டதாகவும் அந்த நடிகை பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறி தன்னுடன் தனிக்குடித்தனம் நடத்தியதாகவும் அந்த நடிகை பல ஆண்டுகளாக புகார் கூறி வருகிறார். தற்போது நடிகையை பாலியல் ரீதியில் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல நடிகை புகார் அளித்துள்ளார். சீமானை கைது செய்யுமாறு தமிழக காவல் துறையை கேட்டு வருகிறார். அது போல் சீமான் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கர்நாடகாவில் உயரமான கட்டடத்தில் இருந்து குதிப்பதாகவும் தற்கொலை மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications