பெங்களூரில் தங்க நகை ஜிமிக்கி டப்பா.. வெள்ளி டம்ளர் பழைய மாடல்.. பெங்களூரு ஓனருக்கு தலை சுத்திருச்சு
பெங்களூரு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி காரணமாக தங்கம் விலை உச்சத்துக்கு எகிறி விட்டது.. தங்கம் விலை 38% வரை குறையலாம் என்று வல்லுநர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், மீண்டும் பழைய அளவுக்கு விலை குறையுமா என்பது சந்தேகம்தானாம்.. இப்படி தங்கத்தின் மதிப்பு எகிற எகிற, தங்க நகைகள் கடத்தல்கள் சம்பவங்களும் பெருகி கொண்டிருக்கின்றன.. இந்நிலையில், பெங்களூரில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம், தாவணகெரே நகரின் மண்டிபேட்டில், "ரவி ஜுவல்லர்ஸ்" என்ற நகை கடை செயல்பட்டு வருகிறது.. கடந்த வாரம் பர்தா அணிந்த சில பெண்கள் கடைக்கு வந்திருந்தனர்.. அது மதிய நேரம் என்பதால், அனைத்து கடை ஊழியர்களும் சாப்பிட சென்றிருந்தார்கள்.. அதனால், ஒரு ஊழியர் மட்டுமே கடையில் இருந்தார்.

பர்தா அணிந்த பெண்கள்
கடைக்குள் நுழைந்த பெண்கள், வெள்ளி டம்ளர் காட்டும்படி அங்கிருந்த ஊழியரிடம் சொல்லி உள்ளனர்.. அதன்படியே வெள்ளி டம்ளரை ஊழியர் காட்டியிருக்கிறார்.. உடனே அந்த பெண்கள், பழைய டிசைனாக இருக்கிறது, புதிய டிசைன்களில் டம்ளர் இருக்கா? என்று கேட்டுள்ளனர். ஊழியரும் வேறு டிசைன்களை எடுத்து வருவதற்காக உள்ளே சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில், வந்திருந்தவர்களில் ஒரு பெண், அருகிலிருந்த கம்மல் டப்பாவை அலேக்காக தூக்கி தன்னுடைய பர்தாவுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.. அந்த டப்பாவில் தங்க ஜிமிக்கிகள், விதவிதமான கம்மல்கள் இருந்துள்ளன.. அவைகளின் மதிப்பு கிட்டத்தட்ட 1.13 கோடி ரூபாயாகும்..
வெள்ளி டம்ளர்கள்
பிறகு, புதுடிசைன்களில் வெள்ளி டம்ளர்களை கையில் அள்ளிக்கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தார் ஊழியர்.. அத்தனை வெள்ளி டம்ளர்களையும் பார்த்த அந்த பெண்கள், ஒரு டிசைனும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்கள்.
எப்போதுமே அந்த கடையின் ஓனர், வாரம் ஒரு முறை எவ்வளவு நகைகள் விற்பனையாகி உள்ளன? எவ்வளவு மீதம் உள்ளன? என்று கணக்கு பார்ப்பது வழக்கமாம்.. அப்படித்தான் நேற்றைய தினமும் கணக்கு பார்த்துள்ளார்.. அப்போது 1.4 கிலோ தங்க நகைகள் காணாமல் போயிருந்தது கண்டு குழப்பம் அடைந்தார்.. பிறகுதான், ஒரு நகைப்பெட்டியே மிஸ்ஸாகியிருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்..
குழம்பி நிற்கும் போலீசார்
பிறகு உடனடியாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, பர்தா அணிந்து வந்த பெண்களில் ஒருவர், நகை பெட்டியை எடுத்து ஒளித்து வைத்தது பதிவாகியிருந்தது.. இதையடுத்து, பசவநகர் போலீஸ் ஸ்டேஷனில், 1.13 கோடி ரூபாய் நகைகளை திருடிய பெண்கள் மீது உரிமையாளர் புகார் செய்தார்.
ஆனால், திருட்டு நடந்து ஒரு வாரம் ஆகி விட்டதாலும், அந்த பெண்கள் பர்தா அணிந்திருந்ததாலும், அவர்களை கண்டுபிடிப்பது போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.. அந்த பெண்களை எப்படி கண்டுபிடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை..!!












Click it and Unblock the Notifications