ஜோடிகள் நெருக்கமாக இருக்க தடை.. ஆப்கனில் இல்லை.. பெங்களூர் கப்பன் பார்க்கில் தான்.. என்னாச்சு?
பெங்களூர்: பெங்களூரில் பசுமையான மரங்கள், செடிகளுக்கு நடுவே இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள கப்பன் பார்க்கில்(பூங்கா) ஜோடிகள் நெருக்கமாக இருக்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காதலர்கள் ஷாக்காகி உள்ளன. மேலும் பல கட்டுப்பாடுகளை தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான அறிவிப்புக்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணம் என்ன? என்பதும் தற்போது வெளியாகி உள்ளது.
பெங்களூரின் மையப்பகுதியில் விதானசவுதாவின் அருகே கப்பன் பார்க் அமைந்துள்ளது. சுமார் 100க்கும் அதிகமான ஏக்கரில் பரந்துவிரிந்து கிடக்கும் இந்த பூங்கா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்கு தளமாக உள்ளது.

நல்ல உயர்ந்த மரங்களுக்கு நடுவே செல்லும் சிறுசிறு பாதைகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஏராளமானவர்கள் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். எப்போதும் ஹாரன் சத்தங்களுக்கு இடையே பெங்களூர் நகரில் வாழும் மக்கள் இந்த பூங்காவில் பறவைகளின் சத்தங்களை கேட்டு இயற்கை சூழலோடு ஒன்றி சில மணிநேரம் பயணிக்கவும் முடியும்.
மேலும் தலைவர்களை நினைவுப்படுத்தும் வகையில் பல சிலைகளும், குழந்தைகள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்களும் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் எப்போதும் இந்த கப்பன் பூங்காவில் மக்கள் நடமாட்டம் இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்களில் ஏராளமானவர்கள் குடும்பத்தோடு வந்து கப்பன் பூங்காவில் பொழுதை கழிப்பது உண்டு.

இதுதவிர தினந்தோறும் காதல் ஜோடிகள் ஆங்காங்கே அமர்ந்து பேசி கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் அவர்கள் எல்லை மீறி நடந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கும். இது பார்ப்பவர்களை முகம் சுழிக்க செய்கிறது. இதனை தடுக்க கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தான் கப்பன் பூங்காவை பராமரித்து வரும் தோட்டக்கலைத்துறை பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்துள்ளது.

அதன்படி காதலர்கள் எல்லைமீறி பொதுவெளியில் நெருக்கமாக இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு கொண்டு செல்லவும், போட்டோ, வீடியோ எடுக்கவும், மரங்களில் ஏறி விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காதல் ஜோடிகள் ஷாக்காகி உள்ளனர்.
இதுதொடர்பாக தோட்டக்கலை மற்றும் பட்டு வளர்ப்பு துறையின் முதன்மை செயலாளர் ராஜேந்திர கட்டாரியா கூறுகையில், ‛‛குடும்பத்துடன் கப்பன் பூங்கா செல்லும் மக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. ஜோடியாக வருபவர்கள் பொதுவெளியில் தவறாக நடந்து கொள்வதாகவும், புதர்களுக்கும் நடுவே செல்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இதனால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த உத்தரவை தொடர்ந்து தற்போது கப்பன் பூங்காவில் காவலாளிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கையில் மைக்குகள், ஸ்பீக்கர் வைத்து விதிகளை மீறுவோரை எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications