ஆக்ரோஷம்! தமிழகத்துக்கு காவிரியில் நீர் கொடுக்கக்கூடாது! பாஜக தலைவர்கள் போராட்டம் -பரபர பெங்களூர்
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் நடக்கும் போராட்டத்தில் கன்னட அமைப்பினருடன் பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, மாஜி அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோள், கோபாலய்யா உள்பட பலர் பங்கேற்றனர். ‛இந்தியா' கூட்டணிக்காக கர்நாடகாவின் உரிமையை தமிழக முதல்வரிடம் காங்கிரஸ் விட்டு கொடுத்துள்ளதாக அவர்கள் விமர்சனம் செய்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை உள்ளது. தற்போது தமிழகத்துக்கு தினசரி 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதனை கர்நாடகா பின்பற்றாமல் இருந்தது. இதற்கிடையே தான் தமிழ்நாடு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வறட்சி நிவாரண அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டிய சூழல் கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் இன்று மண்டியா மாவட்டத்தில் பந்த் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மண்டியாவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூரில் பல இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பெங்களூர் மைசூர் வங்கி சர்க்கிளில் நடந்த போராட்டதில் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கர்நாடகா துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் சேர்ந்து இருக்கும் போட்டோவை வைத்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக எம்எல்ஏக்களான கோவிந்த் கார்ஜோள், மல்லேஸ்வர் எம்எல்ஏ அஸ்வத் நாராயணன், பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட் எம்எல்ஏ கோபாலய்யா, பிசி மோகன் எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டவர்கள் பங்கேற்று ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசினார்கள். ‛இந்தியா' கூட்டணிக்காக டிகே சிவக்குமார் காவிரி விஷயத்தில் தமிழகத்திடம் உரிமையை விட்டு கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

மேலும் நம்பி ஓட்டளித்த மக்களுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர்கள் சாடினர். அதோடு தமிழ்நாட்டுக்கு திறக்கும் தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும் என முழங்கினர். அதோடு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினருடன் சேர்ந்து அவர்கள் ஆளும் கர்நாடகா அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதேபோல் மல்லேஸ்வரம் குவெம்பு சர்க்கிள் உள்பட மேலும் சில இடங்களில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மல்லேஸ்வரத்தில் நடந்த போராட்டத்தில் சிலர் பிஎம்டிசி பஸ்சை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தமிழ்நாடு-கர்நாடகா எல்லையான அத்தப்பள்ளியில் கன்னட அமைப்பினர் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications