பெங்களூரில் ஏப்ரல் 23-ல் தமிழைக் கொண்டாடுவோம் விழா.. முன்பதிவு செய்ய அழைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ஏப்.23ஆம் தேதி தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடக்கும் தமிழைக் கொண்டாடுவோம் விழாவுக்கு முன்பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ் அறக்கட்டளை பெங்களூரு தலைவர் சு.குமணராசன், செயலாளர் அ.தனஞ்செயன் ஆகியோர் கூட்டாக‌ அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழைக் கொண்டாடுவோம் விழா, பெங்களூரில் ஏப்.23 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பெங்களூரில் ஸ்விஸ்டவுனில் உள்ள கிளார்க்ஸ் எக்சாட்டிகா - கன்வென்ஷன் ரிசார்ட்ஸ் & ஸ்பா மனமகிழ் விடுதியில் அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கவிருக்கிறது.

Celebrate Tamil festival held in bangalore on April 23-interested persons can make advance booking

தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழ்ப்பண்பாடு, தமிழ் விளையாட்டுகள், தமிழ் உணவு, தமிழ் மருந்து, நாட்டுப்புற இசை, தமிழர் தற்காப்புக்கலை சிலம்பாட்டம் போன்றவை குறித்து தமிழ் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, கர்நாடகத்தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமிழைக் கொண்டாடுவோம் விழா நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் தமிழ் மரபு விளையாட்டுகள், மொழித்திறன் விளையாட்டுகள், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், அலங்கார சிலம்பம், காவடியாட்டம், பறையிசை, நாட்டுப்புற இசை, சித்த மருத்துவம், நாட்டுப்புற‌ தின்பண்டங்கள் இடம்பெறும். இந்நிகழ்ச்சியில், ஐஏஎஸ் அதிகாரிகள் கனகவல்லி, வி.இராம்பிரசாத் மனோகர், ஆர்.ராமச்சந்திரன், வருமானவரித்துறை அதிகாரிகள் சு.பாண்டியன், பி.செந்தில், ஆர்.இராமச்சந்திரன், அருள்தந்தை வளன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

குழந்தைகளிடையே தமிழ்மொழியின் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து, தமிழ் பண்பாட்டில் தழைத்தோங்க ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். அதனால் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க https://forms.gle/8XREeSsa6rbyhcQn7 என்ற இணையதளத்தில் ஏப்.20ஆம் தேதிக்குள் முன்பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு 9483755974, 9886694338 என்ற கைப்பேசி எண்கள், [email protected]என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். நமது தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ்வழி பிணைப்பை வாழையடி வாழையாக வளர்த்தெடுக்க மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகளுக்கு தமிழர்கள் உறுதுணையாக இருக்க வேண்டியது கடமையாகும் என்று அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+