சந்திரயான் 3.. 14 நாட்கள் கழித்து ரோவரின் கதி என்ன? நிலவில் எந்த நிலையில் இருக்கும்
பெங்களூர்: விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த 14 நாட்கள் முடிந்த பிறகு இந்த லேண்டர் மற்றும் ரோவரின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுவது இயல்பு. 14 நாட்களுக்கு பிறகு லேண்டரின் கதி என்ன என்பது குறித்து பார்ப்போம்.
பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது.. அதில், உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா? என்பது உள்ளிட்டவை குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலவில் மனிதன் காலடி வைத்து விட்டாலும் கூட, அங்கு இருப்பவற்றை இன்னும் முழுமையாக ஆய்வு செய்ய முடியாத நிலையே உள்ளது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ, கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு கடந்த 23 ஆம் தேதி நிலவில் கால் பதித்தது. தற்போது, விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் இந்த பிரக்யான் ரோவர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் நிலவும் சூழல், அங்குள்ள தன்மை உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு மேற்கொள்கிறது. நிலவை பொறுத்தவரை 14 நாட்கள் தொடர்ந்து பகலாகவும் அதன்பிறகு 14 நாட்கள் தொடர்ந்து இரவாக இருக்கும். நிலவில் ஒருநாள் என்பது பூமியின் 28 நாட்களை குறிக்கும். லேண்டர் கருவி சூரிய வெப்பத்தை பயன்படுத்திதான் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் நிலவில் பகல் பொழுதான 14 நாட்களுக்குள் தனது ஆய்வை ரோவர் முடித்து விடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு நிலவில் இரவு தொடங்கிவிடும். தொடர்ந்து 14 நாள் இருளாகவே இருக்கும் என்பதால் லேண்டர் கருவிக்கு சூரிய ஒளி கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் நிலவின் வெப்ப நிலை -113 டிகிரி செல்சியஸ்க்கு மேலே இருக்கும்.
எனவே, ரோவரால் சரியான முறையில் செயல்பட முடியாது. சேமித்து வைக்கும் சோலார் பவர் முடிந்ததும் ரோவரின் செயல்பாடு கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் விக்ரம் லேண்டருடன் ரோவர் தொடர்பில் இருக்கும். அப்போது கிடைக்கும் டேட்டாக்கள் இது கொஞ்சம் தாமதாக இஸ்ரோவுக்கு வந்து சேரும். இஸ்ரோவுக்கும் ரோவருக்கும் நேரடியான தொடர்பு எதுவும் இருக்காது.
விக்ரம் லேண்டரோ, பிரக்யான் லேண்டரோ பூமிக்கு திரும்பாது. நிலவிலேயேயே இருக்கும் லேண்டர் மற்றும் ரோவர் இரவு நேரத்தில் செயல்படாது. 14 நாட்கள் கழித்தும் அதை செயல்பட வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் 14 நாட்கள் இரவு முடிந்த பிறகும் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் தாங்கி நின்று மீண்டும் செயல்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications