ராகுல் காந்தி பதவி நீக்கம்.. காரணமாக இருந்த கர்நாடக "கோலார்" பேச்சு.. அங்கே பாஜக படுதோல்வி!
பெங்களூர்: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனிடையே ராகுல் காந்தி பதவிநீக்கத்திற்குக் காரணமாக இருந்த கோலாரில் யாருக்கு வெற்றி என்பதை பார்க்கலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமை எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று ஆட்சியை அமைத்தது.
இருப்பினும், அந்தத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, நாடு முழுக்க சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டார். அவரது தலைமையில் தான் தேர்தலைக் காங்கிரஸ் சந்தித்தது.

அப்போது 2019இல் கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பிரசாரம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், மோடி என்று பெயர் வைத்துள்ள அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சொல்லி, சர்ச்சை கருத்து ஒன்றையும் தெரிவித்தார். அது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது இந்தப் பேச்சு குறித்து குஜராத் பாஜக எம்எல்ஏ ஒருவர் வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
சூரத் நீதிமன்றத்தில் நடந்த இந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சிறை என்பதால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்தார்.. இதைக் கண்டித்து காங்கிரஸ் நாடு முழுக்க போராட்டம் நடத்தியது. மேலும், காங்கிரஸ் சார்பில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.
இருப்பினும், மேல்முறையீட்டில் இதுவரை அவரது தண்டனையை நிறுத்தி வைக்க எந்தவொரு நீதிமன்றமும் தீர்ப்பு அளிக்கவில்லை. இதனால் அவர் எம்பி பதவியை இழந்துள்ளார். அதேபோல ராகுல் காந்தி வசிக்கும் அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும் என்று கடந்த மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து 12 துக்ளக் லேன் பங்களாவில் இருந்து ராகுல் காந்தி காலி செய்தார். இப்போது அவர் தனது தாயாருடனேயே வசித்து வருகிறார்.
நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. உலகளவில் சில சர்வதேச நாடுகளின் பிரமுகர்களும் கூட இது குறித்து கருத்துகளைத் தெரிவித்தனர். இது அத்தனையும் கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பேசிய பேச்சு தான் காரணமாக இருந்தது. இன்று கர்நாடக மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அந்த கோலார் தொகுதியில் யாருக்கு வெற்றி என்பதைப் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தபால் வாக்குகளை எண்ணும் போது பாஜக முன்னிலையில் இருப்பது போல இருந்தது. இருப்பினும், அதன் பின்னர் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது.
இப்போது கர்நாடகாவில் சுமார் 125-135 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 50- 60 தொகுதிகளிலும், மஜத 20-30 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில் கடும் போட்டி இருக்கும் அல்லது தொங்கு சட்டசபை அமையும் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவற்றை பொய்யாக்கி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸின் இந்த வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்த வெற்றிக்குப் பல தலைவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சரி விஷயத்திற்கு வருவோம். கர்நாடகாவின் கோலார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோதூர் மஞ்சுநாதா 75,000 வாக்குகள் பெற்று மிகப் பெரியளவில் முன்னிலை பெற்றுள்ளார். அதேநேரம் பாஜகவின் ஆர்.பார்த்துரு பிரகாஷ் சுமார் 40,000 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளார்.
அதாவது ராகுல் காந்தி பதவிநீக்கத்திற்குக் காரணமாக இருந்த கோலார் தொகுதியில் காங்கிரஸ் இப்போது பெரியளவில் வென்றுள்ளது. பாஜக மிகப் பெரிய தோல்வியடைந்துள்ளது.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. புதிய தலைவர் மாணிக்கம் தாகூர்? ராகுல் காந்தி கிரீன் சிக்னல்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications