சசிகாந்த் செந்தில் அதிரடி.. தர்மஸ்தலா வழக்கு விஷயத்தில் ஜனார்த்தன ரெட்டி மீது அவதூறு வழக்கு
பெங்களூர்: தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் தமிழகத்தின் திருவள்ளூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தான் உள்ளதாக கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து ஜனார்த்தன ரெட்டி மீது சசிகாந்த் செந்தில் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலாவில் புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றினேன். இந்த காலக்கட்டத்தில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன என போலீசில் புகாரளித்தார்.
இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கர்நாடகா அரசு எஸ்ஐடி எனும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் கூறிய புகார் பொய் என்பது தெரியவந்தது. இதையடுத்து புகாரளித்தவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக தர்மஸ்தலா விவகாரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பியும், கர்நாடகாவின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஜனார்த்தன ரெட்டி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். ‛‛தர்மஸ்தலா மர்ம மரணம் விவகாரத்தின் பின்னணியில் சசிகாந்த் செந்தில் இருக்கிறார். அவரது அழுத்தத்தால் தான் கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. புகார் அளித்து மாஸ்க் அணிந்து நடமாடும் நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவருக்கும், சசிகாந்த் செந்திலுக்கும் நெருங்கிய தெடர்பு உள்ளது'' என்று கூறினார்.
இதனை சசிகாந்த் செந்தில் முற்றிலுமாக மறுத்தார். இந்நிலையில் தான் தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாக ஜனார்த்தன ரெட்டி மீது பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகாந்த் செந்தில் கிரிமினல் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பத்திரிகையாளர்களுக்கு சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டியில், ‛‛அடிப்படை ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கத்தில் வதந்தி கிளப்பி உள்ளனர். இதனை கண்டுக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் தினம் தினம் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இதனால் சட்டப்படி கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன்'' என்றார்.
இந்த வேளையில், ‛‛கர்நாடகாவில் நீங்கள் பணியாற்றி உள்ளீர்கள். உங்களுக்கும், ஜனார்த்தன ரெட்டிக்கும் ஏதாவது முன்விரோதம் இருக்கிறதா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சசிகாந்த் செந்தில், ‛‛அதற்கான காரணம் தெரியவில்லை. நான் பல்லாரி அசிஸ்டென்ட் கலெக்டராக பொறுப்புக்கு வரும்போது அவர் (ஜனார்த்தன ரெட்டி ) கைதானார். இதனால் ஏற்பட்ட வன்முறையை நாங்கள் தான் கட்டுப்படுத்தினோம். அதன்பிறகு சிபிஐ உள்பட பிற விசாரணைகளுக்கு உதவினோம். ஆவணங்களை வழங்கினோம். அதை வைத்து இப்படி நடந்து கொள்கிறாரா? அரசு பணியை செய்த எனக்கு அரசியல் வழியாக வந்து இப்படி குற்றச்சாட்டுகிறாரா? என்பது தெரியவில்லை'' என்றார்.
சசிகாந்த் செந்தில் தற்போது திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கிறார். அதற்கு முன்பு அவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். 2009ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த 2009 முதல் 2012 வரை கர்நாடக மாநிலம், பல்லாரி உதவி கலெக்டராக பணியாற்றினார். பல்லாரி ஜனார்த்தன ரெட்டியின் சொந்த மாவட்டமாகும். சசிகாந்த் செந்தில் அங்கு பணிக்கு சென்ற சமயத்தில் ஜனார்த்தன ரெட்டி மீது கனிம சுரங்க முறைகேடு வழக்கில் நிலுவையில் இருந்தது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ விசாரணை நடந்தது. அப்போது சசிகாந்த் செந்தில் சிபிஐக்கு உதவினார்.
அதன்பிறகு சிவமொக்கா மாவட்ட சிஇஓ, சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா மாவட்டங்களின் கலெக்டர், கனிமவள துறை இயக்குநர் பதவிகளை வகித்து உள்ளார்.இதில் கடந்த 2017 முதல் 2019 வரை சசிகாந்த் செந்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தின் கலெக்டராக இருந்தார். தர்மஸ்தலா என்பது இந்த மாவட்டத்துக்குள் தான் இருக்கிறது. பிறகு கடந்த 2019ம் ஆண்டு ஐஏஎஸ், பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் 2020ல் காங்கிரசில் இணைந்தார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஜனார்த்தன ரெட்டி சசிகாந்த் செந்தில் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications