தர்மஸ்தலா வழக்கை கிளறி விட்டது திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் என்கிறார் ஜனார்த்தன ரெட்டி
பெங்களூர்: தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் தமிழகத்தின் திருவள்ளூர் லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தான் உள்ளார்.புகார் அளித்த நபர் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கும், சசிகாந்த் செந்திலுக்கும் தொடர்பு உள்ளது. சசிகாந்த் செந்தில் அழுத்தத்தால் தான் கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது'' என்று கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு சசிகாந்த் செந்தில் பதிலடி கொடுத்துள்ள நிலையில் ஜனார்த்தன ரெட்டி குற்றச்சாட்டின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலாவில் புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் நேத்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. கோவிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் போலீசில் பரபரப்பான புகார் அளித்தார்.

அதில், ‛‛ கடந்த 1995ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 19 ஆண்டுகள் வரை கோவிலில் தூய்மை பணியாளராக பணியாற்றினேன். இந்த காலக்கட்டத்தில் பெண்கள், மாணவிகளின் உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டேன். உடல்களில் ஆசிட் தழும்புகள், காயங்கள் இருந்தன. இப்போது கோவிலில் வேலை செய்யவில்லை. கர்நாடகாவை விட்டு வெளிமாநிலத்தில் வசிக்கும் நிலையில் மனம் உறுத்தியதால் புகார் அளித்தேன்'' என்றார்
எஸ்ஐடி விசாரணை
இதனால் பெண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழுவினர் நேத்ராவதி ஆற்றங்கரையில் உடல்களை தேடி வருகின்றனர்.
புகார் அளித்தவர் கூறிய இடத்தில் போலீசார் பள்ளங்கள் தோண்டி உடல்களை தேடி வருகின்றனர். சிதைந்த எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசிகாந்த் செந்திலுக்கு தொடர்பு?
இதற்கிடையே தான் தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில் தமிழகத்தின் திருவள்ளூர் காங்கிரஸ் எம்பியும், கர்நாடகாவின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இவர் பெங்களூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தர்மஸ்தலா மர்ம மரணம் விவகாரத்தின் பின்னணியில் சசிகாந்த் செந்தில் இருக்கிறார். அவரது அழுத்தத்தால் தான் கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. புகார் அளித்து மாஸ்க் அணிந்து நடமாடும் நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவருக்கும், சசிகாந்த் செந்திலுக்கும் நெருங்கிய தெடர்பு உள்ளது. அந்த நபரை சசிகாந்த் செந்தில் தான் பின்னால் இருந்து இயக்குகிறார். . சசிகாந்த் மீதான குற்றச்சாட்டுக்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளது.
புனித தன்மையை கெடுக்க..
இந்த விவகாரத்தில் மாநில விசாரணை அமைப்பிடம் இருந்து உண்மை வராது. இதனால் சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தர்மஸ்தலா விவகாரத்தில் பல யூடியூபர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது தர்மஸ்தாலாவின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது.
இந்த வழக்கில் சதி இருப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். சதி செய்தவர்களை அரசு உடனடியாக கைது செய்து, நம் மாநிலத்தின், மஞ்சுநாதா கோவில் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். இதுதொடர்பாக திமன்றத்தில், சட்ட போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன்'' என கூறினார்.
சசிகாந்த் செந்தில் பெயர் வருவது ஏன்?
தமிழகத்தின் திருவள்ளூர் (தனி) லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்பியான சசிகாந்த் செந்தில், 2009ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த 2009 முதல் 2012 வரை கர்நாடக மாநிலம், பல்லாரி உதவி கலெக்டராக பணியாற்றினார். இது ஜனார்த்தன ரெட்டியின் சொந்த மாவட்டமாகும். அதன்பிறகு சிவமொக்கா மாவட்ட சிஇஓ, சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சிண கன்னடா மாவட்டங்களின் கலெக்டர், கனிமவள துறை இயக்குநர் பதவிகளை வகித்து உள்ளார்.
இதில் கடந்த 2017 முதல் 2019 வரை சசிகாந்த் செந்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தின் கலெக்டராக இருந்தார். தர்மஸ்தலா என்பது இந்த மாவட்டத்துக்குள் தான் இருக்கிறது. பிறகு கடந்த 2019ம் ஆண்டு ஐஏஎஸ், பதவியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் 2020ல் காங்கிரசில் இணைந்தார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஜனார்த்தன ரெட்டி சசிகாந்த் செந்தில் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.
சசிகாந்த் செந்தில் பதிலடி
இந்நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு சசிகாந்த் செந்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி சசிகாந்த் செந்தில், ‛‛ஜனார்த்தன ரெட்டியின் குற்றச்சாட்டின் யூகத்தின் அடிப்படையிலானது. அவர் கட்டுக்கதைகளை கூறுகிறார். நான் எந்த அரசின் பேச்சையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஜனார்த்தன ரெட்டியின் குற்றச்சாட்டை கேட்டு சிரிப்பு தான் வந்தது. ஏனென்றால் அவர் என்னை குற்றம்சாட்டுவதன் பின்னணியில் என்ன இருக்கிறது? என்பது தெரியவில்லை.
நான் ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்து 6 ஆண்டுகள் ஆகிறது. இப்போது நான் வேறு கட்சியில் இருக்கிறேன். நான் பல்லாரியில் பணியில் இருந்தபோது ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். நான் அப்போது தான் ஜனார்த்தன ரெட்டியை பார்த்து இருக்கிறேன்'' என்று விளக்கத்தோடு பதிலடி கொடுத்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications