பெங்களூரே அதிருது.. அப்பார்ட்மென்ட்டில் "அந்த" இளம் ஜோடி.. கடைசியில் "குக்கருக்குள்" அடங்கிய ஜீவன்
பெங்களூரு: லிவிங் டூ கெதர் என்றாலே குக்கர்தான் ஞாபகம் வருகிறது.. இதோ இன்னொரு குக்கர், பொதுமக்களை அலற வைத்து வருகிறது.
டெல்லி, மும்பை பகுதிகளில், சமீப காலமாகவே நிறைய கொலைகள் நடந்து வருகின்றன.. குறிப்பாக, லிவிங் டூ கெதர் உறவில் வாழ்ந்து வந்த ஜோடிகளுக்குள் தகராறு ஏற்பட்டு, கொலை வரை சென்றது.

டெல்லி, மும்பை: தங்களை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த பெண்களை, சம்பந்தப்பட்ட காதலர்கள், கொலை செய்ததுடன் மட்டுமல்லாமல், கொடூரமாக துண்டித்தனர்.. அந்த துண்டுகளை ஃப்ரிட்ஜ்களில் வைத்ததுடன், குக்கரில் வேக வைத்து, சுற்றுப்பகுதிகளிலுள்ள நாய்களுக்கு வீசியிருந்தனர். இதெல்லாம் தனித்தனியாக நடந்த வேறு வேறு சம்பவங்கள் என்றாலும், ஒரே மாதிரியான கொடூரத்தின் அடிப்படையில் அமைந்தவை..
அதனால்தான், போலீசார் இந்த கொலைகளை கண்டுபிடிக்க அந்த வீடுகளின் கிச்சனுக்குள் நுழைந்துபோது, குக்கரில் உள்ள வெந்துபோன சதைகளை பார்த்து, வாந்தி எடுத்துக் கொண்டு, வெளியே அலறி ஓடிவந்தனர்.
குக்கர் கொலை: வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த கொடுமை, இப்போது நம்முடைய தென்மாநிலங்களிலும் படர்ந்துவிட்டது. பக்கத்து மாநிலமான, அதுவும் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள மண்ணை சேர்ந்தவர்தான் இந்த "குக்கர் கொலை"யை நடத்தியிருக்கிறார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தேவா என்ற 24 வயது பெண்.. இவர் காலேஜ் படிக்கும்போதே வைஷ்ணவ் என்ற இளைஞரை காதலித்தார்.. வைஷ்ணவ் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்..
இருவருமே ஒன்றாக படித்துமுடித்து, பெங்களூரிலேயே மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால், இருவருமே லிவிங் டூ கெதர் முறையில் வாழ துவங்கினர். இதற்காக, பெங்களூருரில், மைக்கோ லேஅவுட்டில் அபார்ட்மெண்ட் ஒன்றில் 2 வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார்கள். ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இவர்களுக்குள் தகராறு வெடித்தது..
நடத்தை: தேவாவுக்கு அடிக்கடி போன் வருவதை கண்ட வைஷ்ணவ், அவரது நடத்தையில் சந்தேகப்பட்டார்.. எனவே, இன்னொரு நபருடன் தேவாவுக்கு தொடர்பு இருப்பதாக நம்பினார்.. இந்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து, 2 பேருக்குள்ளும் மோதல் வெடித்து கிளம்பியது. வழக்கம்போல், சம்பவத்தன்றும் இதே தகராறுதான் வெடித்தது.. இதில், ஆத்திரமடைந்த வைஷ்ணவ், நேராக கிச்சனுக்கு சென்று, குக்கரை எடுத்து தேவாவை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்..
மண்டையிலேயே குக்கரில் அடித்ததினால், பலத்த காயமடைந்த தேவா, சம்பவ இடத்திலேயே சுருண்டு உயிரிழந்தார். இதைப்பார்த்து பயந்துபோன வைஷ்ணவ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விசாரணை: இதனிடையே, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், இதுகுறித்து தந்த தகவலின் அடிப்படையில், போலீசார் விரைந்து வந்தனர்.. தேவாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பி வைத்தனர். பிறகு, நடந்த கொலை குறித்த விசாரணையை துவங்கியபோது, அக்கம்பக்கத்தினர் இந்த ஜோடி பற்றி பல தகவல்களை சொன்னார்கள்..
"எந்நேரமும் இருவருக்குள்ளும் சண்டை நடக்கும்.. அடிதடி சத்தம் அடிக்கடி எங்களுக்கு கேட்கும்.. இருவருமே இதுகுறித்து இதுவரை போலீசுக்கு சென்று புகார் தந்ததில்லை.. ஆனால், இவர்களின் காதல் விவகாரம் முதல் தகராறுகள் வரை, 2 குடும்பத்தினருக்குமே தெரியும்.. அவர்களும் அடிக்கடி வந்து 2 பேரையும் சமாதானம் செய்து வைத்துவிட்டு போவார்கள்.. கல்யாணம் செய்துவைத்துவிட்டால், இந்த தகராறுகள் வராது என்று நம்பி, அதற்கான ஏற்பாடுகளையும் செய்யவிருந்தனர். அதற்குள் இப்படி நடந்துவிட்டது" என்றனர்.
அதிர்ச்சி: இதனிடையே, தப்பியோடிய வைஷ்ணவை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள். குக்கராலேயே இளம்பெண் அடித்து கொன்ற சம்பவம், கேரளாவிலும், பெங்களூரிலும் பரபரப்பை தந்து வருகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications