கர்நாடகாவில் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம்..பாஜக நிர்வாகிகளை விரட்டி பிடித்த தேர்தல் அதிகாரி
பெங்களூர்: கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவு வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த பாஜக நிர்வாகிகள் இருவரை கல்பர்க்கி மாவட்ட தேர்தல் அதிகாரி விரட்டி பிடித்துள்ளர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் 217 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்த தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நேற்று ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நேற்று கடைசி நாள் பிரசாரம் என்பதால் பிரதமர் மோடி உள்பட தேசிய தலைவர்கள் அவரவர் கட்சிகளுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தனர்.

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில், தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கவும் ஆங்காங்கே சிறப்பு சோதனைகளும் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் முக்கிய இடஙகளில் வாகன சோதானைகளும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நேற்று இரவு கல்பர்க்கி தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜக நிர்வாகிகள் பணம் விநியோகிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் தெரிவித்தனர். பாஜக எம்.எல்.ஏ தத்தரேயா படீல் ரேவூரின் ஆதரவாளர்கள் பணம் விநியோகித்து வருவதாக குற்றம் சாட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசாரிடம் தகவல் எதுவும் தெரிவிக்காமல் குறிப்பிட்ட இடத்திற்கு தேர்தல் அதிகாரி குருகர் சென்றார். தேர்தல் அதிகாரியை பார்த்ததும் பணம் விநியோகித்த பாஜக நிர்வாகிகள் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் அவர்கள் இருவரையும் விரட்டி சென்று பேருந்து நிலையம் அருகே தேர்தல் அதிகாரி கைது செய்தார்.

இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதேவேளையில், பணம் வைத்திருந்த பையுடன் மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் கூறுகின்றனர். இது குறித்து கல்பர்க்கி மாவட்ட போலீஸ் கமிஷனர் கூறுகையில், நீதிமன்றத்திடம் அனுமதி பெற்ற பிறகு இரண்டு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யட்டுள்ளது" என்றார்.
கல்பர்க்கி தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அல்லம்பிரபு பாட்டீலும் நிகழ்விடத்திற்கு வந்தார். நாளை தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது கல்பர்க்கி தெற்கு சட்டமன்ற தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications