"ஒரே ட்வீட்.." மொத்தமாக அமுலுக்கு கிளம்பிய எதிர்ப்பு! "தேர்தல் வேற இருக்கே.." கையை பிசையும் பொம்மை
பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் நிலையில், குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நடத்தும் அமுல் நிறுவனம் போட்ட ஒற்றை ட்வீட் அங்கே அரசியல் மோதலுக்கு வித்திட்டுள்ளது.
கர்நாடகாவில் மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கே ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது. அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.

அமுல்: இதனிடையே குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நடத்தும் அமுல் நிறுவனம் போட்ட ஒற்றை ட்வீட் கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. அதாவது குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் பெங்களூருவில் ஆன்லைன் டெலிவரிகளை தொடங்குவதாகப் பதிவிட்டிருந்தது. கர்நாடகாவின் அரசு பால் நிறுவனமான நந்தினியில் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நந்தினி பிராண்டின் உரிமையாளராகக் கர்நாடகா பால் கூட்டமைப்பு உள்ளது. இதைக் குஜராத்தின் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் (அமுல்) உடன் இணைக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் இதைக் கையில் எடுத்து பாஜகவைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். கர்நாடக நிறுவனத்தை அழிக்கும் தீய முயற்சி இது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

கிளம்பிய எதிர்ப்பு: இப்போது இணையத்தில் #GoBackAmul, #SaveNandini உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. இதன் ஒரு பகுதியாகக் கர்நாடகாவில் உள்ள ஒரு ஹோட்டல் அமைப்பு, மாநில பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக நந்தினி பாலை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து காங்கிரஸின் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், "அமுல் பொருட்களை வாங்க மாட்டோம் என்று அனைத்து கன்னடர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.. மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் காக்க ஏற்படுத்தப்பட்ட கர்நாடகா பால் கூட்டமைப்பை அழிக்க முயல்பவர்களை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.
இந்தி திணிப்பு என்ற மொழி துரோகம் மட்டுமின்றி, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக விளங்கும் கர்நாடகா பால் கூட்டமைப்பை முடக்கி விவசாயிகளுக்குத் துரோகம் செய்யப் போகிறது பாஜக அரசு. குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரும் இணைப்பு முயற்சிகள் வெற்றி பெறாததால், பின் வாசல் வழியாகக் கர்நாடகாவுக்குள் அமுலைக் கொண்டுவர முயல்கின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் பொம்மை உடனடியாக தலையிட வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

சமாளிக்கும் பொம்மை: இருப்பினும், அமுல் விஷயத்தில் அரசியல் வேண்டாம் என்று தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நந்தினி பிரண்டை நாட்டின் நம்பர் ஒன் பிராண்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நந்தினி பொருட்கள் பிற மாநிலங்களில் விற்கப்படுவதைச் சுட்டிக் காட்டிய அவர், அனைத்து மாநிலங்களிலும் அமுலை ஓவர்டேக் செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
அதேநேரம் அமுலை விட நந்தினி ஒரு சிறந்த பிராண்ட் என்பதால் கர்நாடகாவுக்குள் வெளி பிராண்ட்கள் வரத் தேவையில்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க விரும்புகிறோம். எங்களுக்கு எந்த அமுலும் தேவையில்லை" என்றார்.
ஜேடிஎஸ் எதிர்ப்பு: இதற்கு ஜேடிஎஸ் கட்சியும் கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், "நந்தினியின் பால், நெய், வெண்ணெய் ஆகியவையே இன்னும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்காத சூழ்நிலையில், குஜராத்தின் அமுல் நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை அறிவிப்பு எதைக் குறிக்கிறது? எண்ணற்ற கன்னடர்களின் உழைப்பை இது அழிப்பதாகத் தெரியவில்லையா.. இது அமுலை அழிக்கும் ஒரு தீய திட்டம் என்பதில் சந்தேகமே இல்லை. இதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு தேசம், ஒரு அமுல், ஒரு பால் மற்றும் ஒரு குஜராத் என்பதே மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் நந்தினியை அழிக்க முயல்வதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளார். அமுல் நிறுவனத்தின் ஒற்றை ட்வீட் தேர்தல் நடக்கும் கர்நாடகாவில் பெரிய அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
சமீபத்தில் தான் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தயிர் பேக்கெட்களில் தஹி என்று இந்தியில் எழுதி, அதைத் தொடர்ந்து மாநில மொழிகளில் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதற்குத் தமிழ்நாடு, கனடா மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications