துருப்புச்சீட்டான ‛ரம்பா’.. விக்ரம் லேண்டரின் மாஸ் பின்னணி! சாதிக்கப்போகும் சந்திரயான் 3.. எப்படி?
பெங்களூர்: நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறங்கி சாதித்த நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் ‛ரம்பா' பங்களிப்பு பற்றியும், விக்ரம் லேண்டர் செயல்படுவது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் எனும் விண்வெளி திட்டத்தை உருவாக்கியது. ஏற்கனவே சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2 திட்டங்களை இந்தியா செயல்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பிஎஸ்எல்வி எல்விஎம் 3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட்டில் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. திட்டமிட்டப்படி உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி தரையிறங்கியது.
மேலும் நிலவின் சுற்றுவட்டபாதையில் இருந்த சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரும் விக்ரம் லேண்டர் தொடர்பை ஏற்படுத்தி நேற்று மாலையில் சாப்ட் லேண்டிங் முறையில் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்தது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வாகனம் வெளியேறி ஆய்வை தொடங்கி உள்ளது.
இந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அங்கு ஆய்வு செய்யும் நிலையில் விக்ரம் லேண்டர் அங்கு என்ன செய்யும்? அதன் பணி என்ன? என்பது குறித்த கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. அதற்கான விடை என்னவென்றால் பிரக்யான் ரோவர் வழங்கும் தகவல்களை விக்ரம் லேண்டர் பெற்று ஆர்ப்பிட்டர் மூலம் பூமிக்கு அனுப்பும் பணியை செய்ய உள்ளது.
அதோடு விக்ரம் லேண்டரும் நிலவில் ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக விக்ரம் லேண்டரில் மொத்தம் 6 ஆய்வு கருவிகள் உள்ளன. இதில் முதல் கருவியின் பெயர் என்பது ChaSTE. இது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பத்தின் அளவை தெர்மோபிசிக்கல் சோதனை மூலம் மேற்கொள்ளும். அதன்பிறகு 2வது கருவியின் பெயர் ILSA என்பதாகும். இது நிலவில் உள்ள அதிர்வுகளை அளவீடும் பணியை மேற்கொள்ளும்.
அதன்பிறகு 3 வது கருவியின் பெயர் ரம்பா (RAMBHA). இது நிலவில் உள்ள வாயுக்கள் மற்றும் பிளாஸ்மா சோதனைகளை செய்யும். இதன்மூலம் நிலவில் உள்ள வாயுக்கள் மற்றும் நியூட்ரான், எலக்ட்ரான் உள்ளிட்டவை உள்ளதா? என்பதை மேற்கொள்ளும். இந்த கருவி மூலம் தான் அங்கு இருக்குள் வாயுக்கள் குறித்த விபரங்களை அறிய முடியும். இதனால் ரம்பா கருவி என்பது இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.
அடுத்ததாக 4வது கருவி என்பது APXS. ஆல்பா பார்ட்டிகிள் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்பது இதன் அர்த்தமாகும். இது நிலவின் மேற்பரப்பில் உள்ள துகள்களின் கலவை எப்படிப்பட்டது என்பதை கண்டறியும் ஆய்வை மேற்கொள்ளும். 5வது கருவி என்பது LIBS. இது லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் என அழைக்கப்படும். லேசர் ஆய்வை செய்யும். 6வது கருவி என்பது ரெட்ரோரெஃப்ளெக்டர் ஆரே என அழைக்கப்படுகிறது. இது நிலவு ஆய்வுக்காக நாசா வழங்கிய கருவியாகும். இதுவும் அங்கு ஆய்வு செய்ய உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications