‛மேகதாது அணை கட்டவே நீர்ப்பாசன அமைச்சராக இருக்கிறேன்’.. திமுக தேர்தல் அறிக்கையை விளாசிய டிகேசி
பெங்களூர்: மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தடுக்கப்படும் என லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று திமுக வெளியிட்டது. இந்நிலையில் தான் மேகதாதுவில் அணை கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காகவே நீர்ப்பாசனத்துறையை வைத்துள்ளேன் என்று கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் பரபரப்பாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ள நிலையில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 18 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர பிற அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் தான் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கனிமொழி எம்பி தலைமையில் தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது.
மாநில உண்மையான சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியல் அமைப்பு திருத்தப்படும். ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும். உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து. மத்திய அரசு பணி தேர்வு தமிழில் நடத்தப்படும். புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யபப்டும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும். இந்தியா முழுவதும் மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு. எல்.பிஜி சிலிண்டர் விலை 500 ஆக குறைக்கப்படும். பெட்ரோல் விலை 75 ஆக் குறைக்கப்படும். டீசல் விலை: 65ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயம் என்ற தலைப்பின் கீழ் மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று பெங்களூர் சதாசிவநகரில் கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், கர்நாடகா துணை முதல்வரான டிகே சிவக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛திமுக தனது தேர்தல் அறிக்கையில் மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என தெரிவித்துள்ளது?'' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு டிகே சிவக்குமார், ‛‛அவர் மாநிலத்தை அவர் பார்த்து கொள்ளட்டும். நான் கர்நாடகாவில் நீர்ப்பாசனத்துறையை (நீர்ப்பாசனத்துறையை டிகே சிவக்குமார் தான் வைத்துள்ளார்)பெற்றிருப்பதே மேகதாது அணையை கட்டுவதற்காக தான். அவர் போராட்டத்தை அவர் செய்கிறார். ஆனால் சட்டம், காவிரி ஆணையம் முன்பு வழக்கு வர உள்ளது. அதில் நியாயம் கிடைக்கும். ஏனென்றால் பெங்களூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனை பற்றிய அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அனைத்து நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.
பாஜகவை வீழ்த்தி ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ்-திமுக கட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தடுக்கப்படும் என திமுக லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ள நிலையில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், அணை கட்டுவதற்காக தான் நீர்ப்பாசனத்துறையை தான் வைத்துள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
-
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications