கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவனிடம் தாலியை கொடுத்துவிட்டு மனைவி எஸ்கேப்! கதறிய குழந்தைகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் அருகே மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த கணவன் இருவரிடமும் சண்டையிட்டார். இந்த விவகாரம் போலீஸ் நிலையம் செல்லவே அந்த பெண் தனது கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார். அப்போது அம்மா.. அம்மா என்று 3 குழந்தைகள் அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகாவில் உள்ள பசவனபுராவில் வசித்து வருபவர் மஞ்சுநாத். இவரது மனைவி பெயர் லீலாவதி. இவர்கள் 2 பேரும் காதல் திருமணம் செய்தவர்கள். 11 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

in-bengaluru-woman-escaped-with-paramour-after-their-illegal-affair-known-by-her-husband

மஞ்சுநாத், வாடகை கார் ஓட்டி வருகிறார். இதனால் அவர் அடிக்கடி இரவில் கார் ஓட்ட செல்வார். இந்நிலையில் தான் லீலாவதிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சந்தோஷ் என்பவருடன் லீலாவதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலனுடன் உல்லாசம்

லாவதி தனது கணவனுக்கு தெரியாமல் கள்ளக்காதலன் சந்தோஷூடன் ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளார். அதுமட்டுமின்றி இரவில் மஞ்சுநாத் காரில் வெளியே சென்றபிறகு சந்தோஷ் அவரது வீட்டுக்கு வந்து லீலாவதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதற்கிடையே தான் லீலாவதியின் நடத்தையில் மஞ்சுநாத்துக்கு சந்தேகம் எழுந்தது. தனது மனைவி லீலாவதி, வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதையும், இரவில் இருவரும் வீட்டில் உல்லாசம் அனுபவிப்பதையும் தெரிந்து கொண்டார்.

மனைவியை கண்டுபிடிக்க நினைத்த..

மேலும் தனது மனைவியை கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்று மஞ்சுநாத் நினைத்தார். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மஞ்சுநாத் மாலை நேரத்தில் வேலைக்கு செல்வதாக கூறி காரை எடுத்து கொண்டு புறப்பட்டார்.

அதன்பிறகு அவர் அருகே உள்ள கிராமத்தில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார். இதற்கிடையே தான் இரவு சுமார் 10 மணியளவில் லீலாவதி, மஞ்சுநாத்துக்கு போன் செய்தார். ‛‛எங்கே இருக்கிறீர்கள்'' என்று கேட்டார்.

வீட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்

அதற்கு மஞ்சுநாத், ‛‛நான் எச்ஏஎல்-லில் நிற்கிறேன். வீட்டுக்கு வர லேட் ஆகும்'' என்று கூறியுள்ளார். மஞ்சுநாத் இப்படி சொன்னது தான் மிச்சம் அடுத்த நொடியை போனை கட் செய்த லீலாவதி தனது கள்ளக்காதலன் சந்தோசுக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்துள்ளார். சந்தோசும் வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்தனர்.

இந்த வேளையில் மஞ்சுநாத் திடீரென்று வீட்டுக்கு வந்தார். மனைவி லீலாவதி மற்றும் அவரது கள்ளக்காதலன் சந்தோஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்தார். மேலும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடினர். போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பன்னரகட்டா போலீஸ் நிலையத்துக்கு இந்த மேட்டர் சென்றது.

தாலியை கழற்றி கொடுத்து எஸ்கேப்

இதையடுத்து மஞ்சுநாத் - லீலாவதி - கள்ளக்காதலன் சந்தோஷ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கோபமான லீலாவதி தனது கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி மஞ்சுநாத் கையில் கொடுத்து விட்டு, ‛‛நீ எனக்கு வேண்டாம். நான் சந்தோஷ் உடன் செல்கிறேன்'' எனக்கூறி சந்தோசை அழைத்து கொண்டு புறப்பட்டார்.

ஸ்டேஷனில் தனது தந்தையை கைவிட்டு தாய் இன்னொருவருடன் செல்வதை அறிந்த 3 குழந்தைகளும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+