விநோத இளைஞர்.. இரவெல்லாம் பாத்ரூமில் பதுங்கி.. காதலியை அசத்த இப்படியா செய்வது.. மலைத்த பெங்களூரு

இரவெல்லாம் பாத்ரூமில் பதுங்கி செல்போன் திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: காதலுக்கு கண் மட்டுமில்லை, கொஞ்சம்கூட அறிவும் இல்லை என்பது போல சில சம்பங்கள் அவ்வப்போது நடந்துவிடுவது உண்டு.. அப்படித்தான் பெங்களூருவிலும் நடந்துள்ளது.

சில சமயங்களில் அளவுகடந்த காதல் பைத்தியக்காரத்தனத்தில் கொண்டு வந்து விட்டுவிடும்.. காதலுக்காகவும், காதலிக்காகவும் எதையும் செய்ய, இளம்காதலர்கள் துணிந்துவிடுவதுதான் இதற்கு காரணம்.

27 வயது பெங்களூரு இளைஞர் ஒருவருக்கு காதல் பிறந்துள்ளது..இவருடைய காதலிக்கு கடந்த 28-ம் தேதி பிறந்தநாள் வந்துள்ளது.. அதனால் அந்த பெண்ணுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை தந்து அசத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார் இளைஞர்..

வித்தியாசமான இளைஞர்

வித்தியாசமான இளைஞர்

அதன்படி, காஸ்ட்லியான செல்போனையும் பரிசாக தர முடிவு செய்தார்.. அந்த இளைஞர் பெயர் அப்துல் முனார்ப்.. ஜேடிபி நகர்ப்பகுதியில் இயங்கி வரும் மிகப்பெரிய செல்போன் ஷோரூம் ஒன்றிற்குள் இரவு நுழைந்தார்.. அப்போது அந்த ஷோரூம் மூடும் நேரம் என்பதால், கதவுகளை அடைத்து பூட்ட ஊழியர்கள் தயாராகி கொண்டிருந்தனர்.. உடனே இந்த இளைஞர் கடையின் பாத்ரூமுக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொண்டார்.

பாத்ரூம்

பாத்ரூம்

கடையை ஊழியர்கள் மூடிவிட்டு சென்றபிறகு, பாத்ரூமில் இருந்து வெளியே வந்து அப்துல், விலைஉயர்ந்த செல்போன்களை தேடினார்.. அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து போன்களுமே அழகாக இருந்ததால், அவைகளில் இருந்து 7 செல்போன்களை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார்.. பிறகு மறுபடியும் அதே கடையின் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டார்.. மறுநாள் காலை வரை இந்த பாத்ரூமுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார்..

பாத்ரூம்

பாத்ரூம்

காலையில் வழக்கம்போல், ஊழியர்கள் கடையை திறந்து வந்துள்ளனர்.. இவரும் எதுவும் தெரியாததுபோல், பாத்ரூமில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார்.. அந்த நேரம் பார்த்து, கடைக்குள் கீழே தரையில் ஒரு செல்போன் விழுந்துள்ளதை, அந்த கடை ஊழியர் பார்த்தார்.. அப்போதுதான் கடையை திறந்துள்ள நிலையில், கீழே எப்படி செல்போன் விழுந்திருக்கும் என்று ஆராயந்தபோதுதான், மேலும் சில செல்போன்கள் காணாமல் போனதும் தெரியவந்தது.. இதையடுத்து, உடனடியாக போலீசில் புகார் தரப்பட்டது..

ரெஸ்ட்டாரெண்ட்

ரெஸ்ட்டாரெண்ட்

போலீசாரும், செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பரை வைத்து, திருடப்பட்ட செல்போன் இருக்கும் இடமும், அப்துல் முனாப் பற்றிய விவரங்களும் தெரியவந்தது.. பிறகு போலீசார் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர்.. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவராம்.. பிடிஎம் லேஅவுட் பகுதியில் தங்கி ஒரு ரெஸ்டாரெண்ட்டில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது..

புது காதலி

புது காதலி

இவருக்கு ஒரு பெண் சமீபத்தில் இன்ட்ஸ்டாகிராமில் பழக்கமாகி உள்ளார்.. அவர் மீது காதலும் வந்துள்ளது.. தன் காதலில் அந்த பெண் விழ வேண்டும் என்பதற்காக வும், அந்த பெண்ணை கவர வேண்டும் என்பதற்காகவும் செல்போன் தர முடிவு செய்துள்ளார்.. ஆனால், கையில் காசு இல்லை.. அதனால், எப்படி காதலிக்கு, காசு இல்லாமல் பரிசு தருவது என்று கூகுளில் தேடினாராம்.. அதில் கிடைத்த ஐடியாபடிதான், மேற்படி கடைக்குள் கடந்த 27-ம் தேதி நுழைந்து ஆட்டைய போட்டுள்ளார்..

கூண்டுக்கிளி

கூண்டுக்கிளி

அதுமட்டுமல்ல திருடிய 7 செல்போனில் 6 செல்போனையும் காதலிக்கு பரிசளித்துவிட்டு, மீதி ஒன்றை அப்துல் முனாப் பயன்படுத்த துவங்கி உள்ளார்.. அப்போதுதான் போலீசில் சிக்கி உள்ளார்... இப்போது போலீசார் 6 செல்போன்களை கைப்பற்றியுள்ளனர்.. அவைகளின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும்.. முனாப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி உள்ளார்.. பாத்ரூமில் தானாகவே சிறைபட்ட காதல் ரோமியோ அப்துல், இப்போது நிஜமாகவே சிறைக்குள் அடைப்பட்டுப்போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+