கர்நாடகா பந்த்: பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறையா? அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று பந்த் நடக்கும் நிலையில் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. பெலகாவி என்பது கர்நாடகாவின் ஒருபகுதியாக இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா அரசு பஸ்சில் மராத்தியில் பேச வேண்டும் என்கூறி கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரி மீது மராத்தி மொழி பேசுவோர் தாக்குதல் நடத்தினர்.

Karnataka Bandh Karnataka Bangalore

இதனை கண்டித்து இன்று கர்நாடகாவில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரியும், கலசா பண்டூரி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் கர்நாடகாவில் இன்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதோடு கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையோர கிராம கன்னட மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், வட கர்நாடகா மாவட்டங்களில் வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பந்த்துக்கு கர்நாடகா அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையே தான் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இப்படியான சூழலில் தான் முக்கிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெங்களூர் கலெக்டர் ஜெகதீசா கூறுகையில், ‛‛கர்நாடகா பந்த் போராட்டத்தையொட்டி பெங்களூரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும். விடுமுறை என்பது அளிக்கப்படவில்லை'' என்று கூறியுள்ளார். மேலும் இந்த பந்துக்கு அரசு ஆதரவு வழங்கவில்லை. இதனால் வழக்கம்போல் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கர்நாடகா தொடக்க மற்றும் நடுநிலைபள்ளிகளின் சங்க நிர்வாகம் (KAMS or Associated Managements of Primary and Secondary Schools of Karnataka) உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கம் சார்பில், ‛‛பந்த் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்குகிறோம். ஆனால் பள்ளிளுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. விடுமுறை வழங்கினால் நடந்து வரும் தேர்வுகள் பாதிக்கப்படும். மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்கிவிட்டது. அதேபோல் சிபிஎஸ்சி மற்றும் ஐஎஸ்சி பாடத்திட்ட பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கும் சனிக்கிழமை தேர்வு உள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் அறிவியல் தேர்வும், ஐஎஸ்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஹோம் சயின்ஸ் பேப்பர் - 1 (theory) தேர்வும் உள்ளது'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+