யார் அடுத்த முதல்வராக வேண்டும்? சர்வேயில் கர்நாடக மக்களின் ஆச்சரிய முடிவு.. இது லிஸ்ட்லயே இல்லையே!
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பல்வேறு அமைப்பினர் சர்வேக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பாப்புலர் போல்ஸ் எனும் அமைப்ப சார்பில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்ற கேள்விக்கு மக்கள் ஆச்சரியமான பதிலை அளித்துள்ளனர். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருக்கிறார். கடந்த 2018ல் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது கர்நாடகா சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த முறை அங்கு நான்கு முனை போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் தேர்தல் பணியை துவங்கி நிலையில் ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது.

பாப்புலர் போல்ஸ் சர்வே
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியைமக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தனிப்பெரும்பான்மையை பெற அனைத்து கட்சியினரும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது ‛பாப்புலர் போல்ஸ்' புதிய சர்வே முடிவு வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து பாப்புலர் போல்ஸ்(Popular Polls) எனும் அமைப்பு தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது.

1.12 லட்சம் பேரிடம் சர்வே
இந்த கருத்து கணிப்பானது 2022 நவம்பர் மாதம் 10ம் தேதி முதல் 2023 ஜனவரி 30ம் தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடந்தது. மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் வசித்து வரும் 1 லட்சத்து 12 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்து கணிப்பானது மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாப்புலர் போல்ஸ் சர்வே வெளியாகி உள்ளன.

அடுத்த முதல்வர் யார்?
அதன்படி கர்நாடகாவில் அடுத்த முதல்வராக யார் வேண்டும்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு மக்கள் பதிலளித்தனர். இதில் அதிகமான மக்கள் அளித்த பதில் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோரை முதல்வராக மக்கள் விரும்புகின்றனர். பாஜக சார்பில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, பாஜக மூத்த தலைவர் பசவனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோரையும், ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தமட்டில் குமாரசாமியையும் முதல்வராக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

குமாரசாமிக்கு அதிக ஆதரவு
இந்த சர்வேயில் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால் அதிகமானவர்கள் முன்னாள் முதல்வரான ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அதாவது மொத்தம் 24 சதவீதம் பேர் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் பிற இடங்களை காட்டிலும் மைசூர் கர்நாடகா பகுதியில் குமாரசாமிக்கான ஆதரவு என்பது அதிகமாக உள்ளது.

சித்தராமையாவுக்கு 2ம் இடம்
இதற்கு அடுத்த படியாக 2வது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பெயரை மக்கள் தெரிவித்துள்ளார். இவரை 18 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் இவருக்கான ஆதரவு உள்ளது. அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை 15 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தலித் சமுதாயத்தை சேர்ந்த பலரும் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை தெரிவித்துள்ளனர். மாறாக காங்கிரஸ் மாநில தலைவர் டிகேசிவக்குமாரின் பெயரை 4 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.

பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு எவ்வளவு?
இது ஒருபுறம் இருக்க பாஜக சார்பில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் முதல்வராக வேண்டும் என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர பிற தலைவர்கள் முதல் அமைச்சராக வர வேண்டும் என்று 29 சதவீதம் பேர் கலவையாக தெரிவித்துள்ளனர்.

தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு
முன்னதாக பாப்புலர் போல்ஸ் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 80 முதல் 84 தொகுதிகளிலும், பாஜகவுக்கு 82 முதல் 87 இடங்களிலும், ஜேடிஎஸ் 42 முதல் 45 இடங்களிலும், மற்றவர்கள் 4 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் கர்நாடகாவில் இந்த முறை தொங்கு சட்டசபை அமையும் என அந்த கருத்து கணிப்பு உணர்த்தியது.
-
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி












Click it and Unblock the Notifications