ஜெயிச்சே ஆகனும்.. கர்நாடகா தேர்தலில் பாஜகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்! ரேஷனில் அரிசி இலவசமாம்..ஆஹா
கர்நாடாகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு இன்னும் 3 மாதத்துக்குள் தேர்தல் நடைபெற உள்ளது.
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இன்னும் தேர்தல் அறிக்கை வெளியிடாத நிலையில் அவ்வப்போது ஒவ்வொரு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 3வது இன்னொரு பெரிய அளவில் ரேஷனில் அரிசி இலவசம் என்ற அறிவிப்பை கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த 2018 ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் 5 ஆண்டு சட்டசபை பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது.
அதன்படி வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை துவங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

கர்நாடகா சட்டசபை தேர்தல்
கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் ஆளும் பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி வாரம் ஒருமுறை கர்நாடகா சென்று பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கர்நாடகாவுக்கு விசிட் செய்து வியூகங்கள் வகுத்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க இழந்த ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால் நான்குமுனை போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்சாகத்தில் காங்கிரஸ்
இந்நிலையில் தான் தேர்தல் தொடர்பாக மாநிலத்தில் பல்வேறு சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சர்வேக்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளன. அதாவது சில சர்வேக்கள் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்கும் என கூறிய நிலையில் பல சர்வேக்கள் காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை வழங்கி உள்ளது. இருப்பினும் மனம் தளராத பாஜக ஆட்சியை தக்க வைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி இன்னும் உஷாராக செயல்பட தொடங்கி உள்ளது.

இலவச அரிசி வழங்குவதாக..
இந்நிலையில் தான் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி புதிய வாக்குறுதியை அளித்துள்ளது. அதாவது மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு பிபிஎல் ரேஷன் அட்டைகளுக்கும் மாதம் 10 கிலோ இலவச அரிசி ‛அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளது.

அரிசியை குறைத்த பாஜக
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் பிரஜா தாவ்ணியாத்திரை மேற்கொண்டு வருகிறோம். இந்த வேளையில் பொதுமக்களின் கோரிக்கையாக இது இருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 7 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது. இது தற்போதைய பாஜக ஆட்சியில் 5 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாஜக மீது கோபத்தில் உள்ளனர். மேலும் மக்கள் கேட்டு கொண்டதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு பிபிஎல் ரேஷன் அட்டைகளுக்கும் 10 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்கப்படும்'' என்றார்.

3வது பெரிய அறிவிப்பு
முன்னதாக காங்கிரஸ் சார்பில் 2 மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதாவது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மாதந்தோறும் வீட்டில் உள்ள ஒரு பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது ரேசனில் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications