Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எண்ணாத தபால் வாக்கு! பெங்களூர் ஜெயநகரில் 16 ஓட்டில் பாஜகவிடம் சவுமியா ரெட்டி தோற்றது இப்படித்தான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் ஜெயநகர் சட்டசபை தொகுதியில் 3 முறை பரபரப்பான முறையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் வெறும் 16 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சவுமியா ரெட்டியை வீழ்த்தி பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் இங்கு பாஜக எப்படி வெற்றி பெற்றது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி பாஜகவை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

Karnataka Election: How Congress MLA Sowmya Reddy lost with BJP Ramamurthy with 16 votes margin? Details here

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்றது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸிடம் ஆட்சியை பறிகொடுத்தது. ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 இடங்களிலும் வென்றனர்.

பெங்களூரை பொறுத்தமட்டில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. 12 இடங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி வென்றது. ஜேடிஎஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. இதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி என்றால் அது பெங்களூர் ஜெயநகர் தொகுதி தான். இந்த சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்எல்ஏ சவுமியா ரெட்டி மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் சிகே ராமமூர்த்தி போட்டியிட்டார்.

ஓட்டு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே இவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்த வந்தனர். இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இறுதியில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி 2வது இடம் பிடித்தார்.

Karnataka Election: How Congress MLA Sowmya Reddy lost with BJP Ramamurthy with 16 votes margin? Details here

இதனை பாஜக வேட்பாளர் சிகே ராமமூர்த்தி ஒப்புக்கொள்ளவில்லை. மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். மேலும் ‛Technical Reasons' எனக்கூறி 177 தபால் ஓட்டுகள் எண்ணப்படாமல் நிராகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, பத்மநாபநகர் எம்எல்ஏ அசோக் அதனை எண்ணும்படி கூறினர்.

பெங்களூர் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான துஷார் கிரிநாத் வந்தார். இதையடுத்து அந்த தபால் ஓட்டுகள் எண்ண உத்தரவிடப்பட்டது. மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது. இதில் ஒரு ஓட்டு மட்டுமே சவுமியா ரெட்டிக்கு கிடைத்தது. 176 ஓட்டுகள் சிகே ராமமூர்த்திக்கு கிடைத்தது. இதனால் அவர் 16 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Karnataka Election: How Congress MLA Sowmya Reddy lost with BJP Ramamurthy with 16 votes margin? Details here

இதனால் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சவுமியா ரெட்டி தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் கண்ணீருடன் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறி சென்றார். முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே சிவக்குமார், அவரது சகோதரர் டிகே சுரேஷ் உள்பட பலரும் ஓட்டு எண்ணும் மையத்துக்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயநகர் தொகுதியில் தோல்வியடைந்த சவுமியா ரெட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும், பிடிஎம் லேஅவுட் எம்எல்ஏவுமான ராமலிங்க ரெட்டியின் மகள் ஆவார். கடந்த முறை ஜெயநகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற்ற நிலையில் நேற்று தோல்வியடைந்தார். இருப்பினும் சவுமியா ரெட்டியின் தந்தையும், சிட்டிங் எம்எல்ஏவுமான ராமலிங்க ரெட்டி மீண்டும் பிடிஎம் லே-அவுட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு நேற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+